என் மலர்
நீங்கள் தேடியது "peace treaty"
- ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.
- வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்தித்து பேசினார்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார்.
மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் டிரம்ப் அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஷியா தொடுத்து வருகிறது. இதனால் ரஷியா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன். அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் அமலில் இருக்கும். ரஷியாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷியா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11-ந்தேதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
குரிலே தீவுகள் என்றழைக்கப்படும் இந்த தீவு கூட்டத்தை தங்கள் நாட்டு வடக்கு எல்லை என்று ஜப்பான் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக ரஷியா - ஜப்பான் இடையே சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே ரஷியா சென்றிருந்தார். அங்குள்ள விளாடிவோஸ்ட்டோக் நகரில் ஜப்பான் பிரதமருடன் செய்தியாளர்களை சந்தித்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சர்ச்சைக்குரிய தீவுகள் பிரச்சனையில் எவ்வித முன்நிபந்தனைகளுமின்றி சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திகொள்ள இருநாடுகளும் முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் இருதரப்பு கூட்டத்தில் சுமூகமான தீர்வு காணப்படலாம் என ரஷிய அதிபரிடம் நான் நம்பிக்கை தெரிவித்தேன் என்றும் அவர் தெரிவித்தார். #ShinzoAbe #JapanRussiapeace