search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penalty fee"

    • ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    • ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வாகனங் களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்து களும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து போக்கு வரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர் களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகை யில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபரா தம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

    இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்து வது தொடர்பான அரசா ணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார்.

    கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களிடம் புதிய போக்கு வரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார் கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேக மாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் .

    அதே நேரத்தில் அதி வேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளி டம் எடுத்துக் கூறப்பட்டது.

    உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப் படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட் பட்ட குழந்தைகளை பாது காப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங் களுக்கு வழி விடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது குறித்து, திருப்பூர் மாவட்ட போலீசார் கூறுகையில் 'போக்குவரத்து விதிமுறை மீறி பயணிக்கும் வாகன ஓட்டிகளை சோதனைச்சாவடிகளில் பிடித்து, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட அபராத கட்டணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.திருப்பூரில் இன்னமும் புதிய கட்டணப்படி யாருக்கும் அபராதம் விதிக்கவில்லை. 'சாப்ட்வேர் அப்டேட்' செய்து விரிவான அறிவுறுத்தல் வந்த பின் அறிவிப்பு வெளியிட்டு, உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.விதிமுறை பின்பற்றினால் அபராதம் குறித்த அச்சம் வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லை என்றனர்.

    ×