search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People demand"

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனத்தொட்டியில் தண்ணீர் நிரப்ப மக்கள் கோரிக்கை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை கரடி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி, பர்கூர் வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. எந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. குளம், குட்டைகளும் வரண்டுவிட்டன.

    இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீரை தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தாள வாடி, பர்கூர் வனப்பகு தியில் கடும் வறட்சி நிலவுவதால் பச்சை பச்சை என காட்சியளித்த மரம், செடி, கொடிகள் காய்ந்து விட்டன.

    இந்த வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் அருகே இருக்கும் கிராமங்களுக்குள் நுழையும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு கிராமங்களு க்குள் நுழையும் யானை களால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மக்காச்சோ ளம், வாழைமரங்கள், தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டஈடும் ஏற்பட்டுள்ளது. சில சமயம் யானை களால் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு விடுகிறது.

    அதேபோன்று மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீருக்காக யானைகள் அந்த பகுதியில் வரும் வாகனங்களை வழி மறைத்து வருகிறது. வாகனங்களை யானை துரத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    கிராமத்துக்குள் புகும் யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் நீண்ட சிரமத்திற்கு பிறகு மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீரை நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, `தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர்.

    ஆனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன.

    இது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பலர் லட்சக்கணக்கில் நஷ்டங்களை சந்தித்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வனப்பகுதி முழுவதும் ஆங்காங்கே வனத்துறையினர் தொட்டிகளில் நீர்களை நிரப்ப வேண்டும்.

    இதற்கென்று வனத்துறையினர் பணியாளர்களை நியமித்து தினமும் காலை, மாலை வேலை என இரு வேலைகளில் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் நீரை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீர் நிரப்புவதன் மூலம் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் எண்ணிக்கை குறையும்.

    இதேபோல் வனப்பகுதி முழுவதும் ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு வனத்துறையினர் யானை கள் ஊருக்குள் புகாதவாறு அகழிகளை வெட்டி இருந்தனர். தற்போது அவை மண் நிறைந்து சமமாக ஆகிவிட்டது. இதனால் யானைகள் எளிதாக ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே வனத்துறையினர் மீண்டும் அகழிகளை ஆழமாக வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.
    • இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகு தியில் விவசாயம், நெசவு பட்டு தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் அணைக்கட்டில் அண்ணா பூங்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள 52 கிராமங்கள் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியிடம் நீண்ட வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வரை பரமத்தி போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் ஜேடர்பாளையம் பொறுப்பு பதவியில் உள்ளார்.

    இளம்பெண் கொலை

    ஜேடர்பாளையம் அருகே கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் தீ வைப்பு சம்பவம், மரங்கள் வெட்டி சாய்ப்பு சம்பவம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,000 க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் சந்திக்க 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பரமத்திக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    கோரிக்கை

    மேலும் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி, கையெ ழுத்துக்காகவும் காத்திருக்கும் எப்.ஐ.ஆர். மற்றும் இதர கோப்புகள் கால தாமதமாக ஆகிறது. இதனால் நேர விரையம் ஆகின்றது. ஆகவே ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு நிரந்தர போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும் என 52 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு உறுதி

    இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, கடந்த காலங்களில் ஜேடர்பாளையம் அமைதியான ஏரியாவாக இருந்தது. மேலும் ஜேடர்பாளையம் சிறிய ஏரியாவாகவும் உள்ளது. அங்கு அதிக குற்றங்கள் பதிவாகவில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இத்தகைய சூழ்நிலை உள்ளது. வரும் காலங்களில் அரசு உத்தரவுபடி தற்போது உள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்ஸ்பெக்ட ராக பதவி உயர்வு ஏற்படும்போது ஜேடர்பாளையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • அடிக்கடி தீப்பொறி மற்றும் மின் கசிவு ஏற்படுகிறது

    அணைக்கட்டு:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலிமேடு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் வசதிக்காக ஆங்காங்கே சின்டெக்ஸ் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்படுகிறது. அதன்படி புலிமேடு வல்லாண்டப்பன் கோவில் செல்லும் வழியில் சின்டெக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

    அதன்அருகில் போர்வெல் மற்றும் சின்டெக்ஸ்க்கு நீர் ஏற்ற மின்மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. அந்தபகுதி மக்கள் தேவைப்படும் நேரத்தில் மட்டும், மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் உபயோகிக்கின்றனர்.

    தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட இந்த மின் மீட்டர் பெட்டியின் கதவுகள், கடந்த சில மாதங்களாக உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பாதுகாப்பின்றி கிடக்கும் இந்த மின் மீட்டரில் அடிக்கடி தீப்பொறி மற்றும் மின்சார கசிவு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு, அதிகாரிகள் இந்த மின் மீட்டரை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

    ×