search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "periyapalayam bhavani amman Temple"

    • கடக லக்னத்தில் பந்தகால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
    • சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முதல் 14 வாரங்கள் தொடர்ந்து ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இதில் தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச் சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆடித்திரு விழா ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலை கோ பூஜை, மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலில் பரம்பரை அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா தலைமையில் கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    ஆடிமாதம் முழுவதும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் வாகன வசதி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    ×