என் மலர்
நீங்கள் தேடியது "perundurai"
பெருந்துறை:
பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் வெல்டிங் வேலைகள் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது.
நேற்று இரவு இங்கு ஊழியர்கள் பணி செய்தனர். இரவு 10 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டது. ஊழியர்கள் வெளியேறினர்.
இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் அந்த நிறுவனத்தில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அவர்கள் அந்த நிறுவனத்தில் சென்று பார்த்தனர். அப்போது அங்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த நிறுவனத்தின் அலுவலக அறையிலும் தீப்பற்றி எரிந்தது.
அந்த அறை உள் பக்கமாக பூட்டி கிடந்தது. அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அப்போது அங்கு ஒருவர் தீயில் கருகி பிணமாக கிடந்தார். அவர் அந்த நிறுவனத்தில் அச்சு தயாரிப்பாளராக பணிபுரிந்த ஆறுமுகம் (வயது 45) என்பது தெரியவந்தது.
அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது தான் இங்கு வந்து அச்சு தயாரிப்பில் ஈடுபடுவார். நேற்று இங்கு வந்த அவர் எப்போது அலுவலக அறைக்குள் சென்றார்? என்பது தெரியவில்லை.
நிறுவனத்தை மற்ற ஊழியர்கள் பூட்டி சென்ற பின்னர் ஆறுமுகம் உள்ளே சென்றது எப்படி? என்பதும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பதும் மர்மமாக உள்ளது.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் டி.எஸ்.பி. ராஜாகுமார், இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர்கள் எட்வர்ட்ராஜ், ராம்பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தினார்கள். அந்த நிறுவனத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அங்கு நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை துரிதப்படுத்துப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள முனியப்ப பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). தனியார் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை இவர் நண்பர்களுடன் பெருந்துறை வந்தார். அப்போது கீழ்பவானி வாய்க் காலில் தண்ணீர் பாய்ந்து செல்வதை கண்டு அதில் இறங்கி குளிக்க ஆசைப்பட்டனர்.
பெருந்துறை அடுத்த திருவாச்சி கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி நண்பர்களுடன் சண்முகம் குளித்தார்.
அப்போது சண்முகம் வாய்க்காலின் எதிரே மறு கரைக்கு நீந்தி சென்றார். வாய்க்காலின் நடுப்பகுதிக்கு சென்றபோது அதிகமாக சென்ற தண்ணீர் திடீரென சண்முகத்தை இழுத்து சென்றது.
அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரை அவரது நண்பர்கள் தேடி பார்த்தனர். கிடைக்க வில்லை. இதனால் கதறி அழுத நண்பர்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வாய்க்காலில் குதித்து தீயணைப்பு வீரர்கள் தேடினர். சுமார் 3 மணி நேரம் போராடி வாய்க்காலில் சிறிது தூரம் தள்ளி சண்முகத்தின் உடலை மீட்டனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சண்முகத்துக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
பெருந்துறை:
கடலூர் மாவட்டம், புவனகிரி, அரகஆலம்பாடி, முகந்தரியான் குப்பம் பகுதியைசேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தேன்மொழி (வயது 19). இன்னும் திருமணமாகாத பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், புலவர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
கம்பெனி வளாகத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 9 மணியளவில் ஹாஸ்டல் வளாகத்தில் துணிமணிகள் துவைக்கும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக்கண்ட ஹாஸ்டல் வார்டன் தேன்மொழியின் பெற்றோருக்கு அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து ஊரில் இருந்து தேன்மொழியின் தந்தை கோவிந்தராஜ் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழியின் தோழியான தமிழ் என்பவரிடம் விசாரித்த போது, தேன் மொழி நேற்று இரவு துணி துவைப்பதற்காக ரூமில் இருந்து சென்றதாகவும், அங்குள்ள இரும்பு தூணை பிடித்த போது அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும்.
கேரளாவுக்கு போகும் வழியில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் வந்த வேன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர்.
பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் வேன் பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவர் இருக்கும் பக்கம் வேன் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் இருக்கை மற்றும் அதற்கு பின்னால் உள்ள 2 இருக்கைகள் நொறுங்கியது.
இதில் டிரைவர் சுதாகர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பின்பக்கத்தில் 2 இருக்கையில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். வேனில் இருந்த மற்றவர்களும் காயம் அடைந்தனர்.
மொத்தம் 20 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களில் திருமூர்த்தி, லட்சுமி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 பேர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த மகேந்திரன் (13), கீர்த்தனா (17), பவ்யா (13), போகேஸ் (13), மவுனிகா (20) ஆகிய 5 பேர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காயம் அடைந்த மற்றவர்கள் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்த சீனாபுரம் பட்டக்காரன் பாளையம் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் 2014-ம் ஆண்டு அந்த பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்காக இந்த கட்டிடத்தில் இருந்த நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு ரேசன் கடை அமைப்பதற்கான மராமத்து பணிகள் நடைபெற்றது. ஆனால் இதுவரை இந்த இடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தை மீண்டும் நூலகமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதுவரை இந்த பகுதியில் ரேசன் கடை அமைக்காததை கண்டித்தும் பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த பல வருடங்களாகவே இந்த பகுதியில் ரேசன் கடை இல்லை. இதனால் அருகில் உள்ள ஆயிக்கவுண்டன் பாளையம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றோம்.
இங்கு ரேசன் கடை அமைக்க பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் தற்போது ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீண்டும் நூலகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Tamilnews
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிஷ்கா ( வயது 7) நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சிறுமி கனிஷ்கா இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உடலை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி கனிஷ்கா குரல் வளை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனடிப்படையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் வனிதா என்பவர் அந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு சென்றதை பார்த்ததாக கூறினார்.

குன்னூர், தூளூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (33). இவருக்கும் சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கருமாண்டி செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகநாகன், கனகா குடும்பத்தினருடன் இவர்கள் நட்பாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வனிதாவின் கணவரான கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் இளைய மகள் கனிஷ்காவை தன் மகள் போல் பாவித்து அந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.
இதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும் தனது மகனுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும் என கருதிய வனிதா கனிஷ்காவை கொலை செய்ய முடிவு செய்தார்.
இதனால் நேற்று முன் தினம் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாக கூறி கடத்தி சென்று அங்கு அந்த சிறுமியின் வாயை பொத்தி கழுத்தின் குரல்வளையை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சிறுமியின் உடலை தனது தோளில் போட்டு கொண்டுசென்று அருகில் உள்ள ஒருமரத்தடியில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனதைத்தையும் ஒப்புக்கொண்டு வனிதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வனிதாவை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வனிதா கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews