என் மலர்
நீங்கள் தேடியது "Petition to Union Minister"
- மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்துள்ளார்.அவரை புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை புதுவையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
மத்திய மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவைக்கு வந்துள்ளார்.
அவரை புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை கால்நடைத்து றைக்கு 3 நடமாடும் மருத்துவமனை வழங்க நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசு ரூ.2 கோடியில் 200 மாட்டு பண்ணை அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. சிறிய நிலப்பரப்பு கொண்ட புதுவையில் இதுபோன்ற பெரிய பண்ணைகள் அமைக்க வாய்ப்புகள் குறைவு.
எனவே இந்த திட்டத்தில் புதுவையில் 50 மாடுகள் கொண்ட பண்ணை திட்டமாக மாற்ற வேண்டும். மத்திய அரசின் 500 ஆட்டு பெட்டை, 25. ஆட்டு கிடா வழங்கும் திட்டத்தையும் மாற்றம் செய்து 20 ஆட்டு பெட்டை, ஒரு கிடா வழங்கும் திட்டமாக மாற்றித்தர வேண்டும். இதனால் புதுவை பயனாளிகள் மிகுந்த பயனடைவர்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை புதுவையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அமைச்சரின் தனி செயலர் மனோகர் ஆகியோர் உடனிருந்தனர்.