search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Philips"

    • டிபி விஷன் நிறுவனத்தின் புதிய பிலிப்ஸ் இயர்போன் தானாக ஆஃப் ஆகும் சென்சார்களை கொண்டுள்ளது.
    • இந்த இயர்போன் பயன்படுத்துபவர்கள் உறங்கிவிட்டால், இதில் உள்ள ஆடியோ மெல்ல குறைந்து, ஆஃப் ஆகி விடும்.

    டிபி விஷன் நிறுவனம் பிலிப்ஸ் N7808 இயர்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிலிப்ஸ் N7808 மாடலில் உள்ள சென்சார்கள் பயனர்களின் உறங்கும் விதத்தை டிராக் செய்து பயனர் உறங்கினால், தானாக ஆஃப் ஆகிவிடும் வசதி கொண்டுள்ளது. இது பிலிப்ஸ் பிராண்டிங்கில் வெளியாகி இருக்கும் முதல் ஸ்லீப் இயர்போன் ஆகும்.

    புதிய ஸ்லீப் இயர்போன் டிபி விஷன் மற்றும் ஸ்லீப் ஆய்வாளர் கோகூன் கூட்டணியில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிலிப்ஸ் N7808 இயர்போனை பயன்படுத்துவோர் அப்படியே உறங்கும் பட்சத்தில் ஆடியோ சத்தம் மெல்ல குறைந்து, தானாக ஆஃப் ஆகி விடும். எனினும், இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படவில்லை. மாறாக இது ஸ்மார்ட் வைட் நாய்ஸ் வெளிப்படுத்துகிறது.

    இந்த இயர்போன் பயனர்களை தூங்க செய்வதோடு, அவர்கள் உறங்கியதும் தானாக ஆஃப் ஆகும் வசதி கொண்டிருக்கிறது. உறக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகளுக்கு பதில் சொல்லும் வகையில் புதிய N7808 இயர்போன் அமைந்துள்ளது. இந்த ஹெட்போன்கள் தரமான நாய்ஸ் ஐசோலேஷன் வசதியை வழங்குகிறது. இந்த இயர்போன் ஏற்படுத்தும் வைட் நாய்ஸ் உறக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வெளிப்புற சத்தத்தை குறைக்கச் செய்கிறது.

    பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன் ஆடியோ அவுட்புட் பயனர் உறங்கியதும் தானாக அட்ஜஸட் ஆகிக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது. இந்த இயர்போனில் உள்ள மெல்லிய ஹவுசிங் இரவில் எவ்வித இடையூறும் இன்றி சவுகரியமாக அணிந்து கொள்ள உதவுகிறது. இதன் டிசைன் மற்றும் சிறிய ஆர்மேச்சர் டிரைவர்கள் இயர்போனை 6mm அளவில் இருக்க செய்துள்ளது.

    சிறப்பான உறக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இயர்போன் கோகூன் ஆப் மூலம் இணைந்து வேலை செய்யுகிறது. இந்த இயர்போனில் அக்செலோமீட்டர்கள் மற்றும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மாணிட்டர் உள்ளது. டிபி விஷன் நிறுவனத்தின் பிலிப்ஸ் N7808 இயர்போன் முழு சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.

    அறிமுக சலுகையாக புதிய பிலிப்ஸ் N7808 ஸ்லீப் இயர்போன்களின் விலை 1,181 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்து 312 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் இந்த ஸ்லீப் இயர்போன் விலை 1681 யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 492 என மாறிவிடும்.

    • பிலிப்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய சவுண்ட்பார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய சவுண்ட்பார் பிரீமியம் பிரிவில் ஏராளமான அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கிறது.

    பிலிப்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சவுண்ட்பார், TAB8947 மற்றும் TAB7807 மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் சினிமாடிக் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள வயர்லெஸ் சப்-வூஃபர் அதிக பேஸ் கொண்டிருக்கிறது. இரு சவுண்ட்பார்களும் வயர்லெஸ் சப்-வூஃபர் மற்றும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

    புதிய பிலிப்ஸ் TAB8947 சவுண்ட்பார் 3.1.2 சேனல்களை கொண்டிருப்பதால் எந்த விதமான அறையிலும் சவுண்ட்-ஐ முழுமையாக அதிக தெளிவாக கொண்டு சேர்க்க முடியும். இது 330 வாட்ஸ் பவர், 360 டிகிரி சரவுண்ட் எஃபெக்ட், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் TAB7807 3.1 சேனல்கள் மற்றும் இரண்டு 8 இன்ச் சக்திவாய்ந்த சப்-வூஃபர்களை கொண்டுள்ளது.

    இந்த சவுண்ட்பார் 3D சவுண்ட், 620 வாட்ஸ் பவர் அவுட்புட் மற்றும் ஆறு இண்டகிரேடெட் டிரைவர்களை கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் ஈசிலின்க் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் புதிய சவுண்ட்பார்கள் ஈக்வலைசர் மோட்கள், பேஸ், டிரெபில் மற்றும் வால்யூம் செட்டிங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    பிலிப்ஸ் TAB8947 மாடலின் விலை ரூ. 35 ஆயிரத்து 990 என்றும் TAB7807 மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • எலெக்ட்ரானிக்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் பிலிப்ஸ் உற்பத்தி செய்து வருகிறது.
    • பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாசக் கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது

    நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிளைகளை நிறுவி உள்ளது. சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த நிறுவனங்களில் இருந்து 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    பிலிப்ஸ் நிறுவனம் எலெக்ட்ரானிக்ஸ் மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவ உபகரணங்களையும் உற்பத்தி செய்து வருகிறது. ஆனால், பிலிப்ஸ் நிறுவனத்தின் சுவாசக் கருவிகளில் கோளாறு இருப்பதாக கண்டறியப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோளாறான கருவிகளால் மூன்றாம் காலாண்டில் சுமார் 1.3 பில்லியன் யூரோ நஷ்டம் ஆகியுள்ளது. 

    மூன்றாவது காலாண்டில் பணவீக்க அழுத்தங்கள், சீனாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவற்றால் பிலிப்ஸின் செயல்திறன் மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, உடனடியாக சுமார் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிலிப்ஸ் சிஇஓ ராய் ஜேக்கப்ஸ் அறிவித்துள்ளார்.

    உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக சுமார் 4,000 ஊழியர்களை குறைக்க உள்ளோம், இது கடினமான அதேசமயம் அவசியமான முடிவு என சிஇஓ தெரிவித்தார். 

    பிலிப்ஸ் நிறுவனம் புதிய எல்.இ.டி. மற்றும் 4K ஸ்மார்ட் டி.வி. மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Philips



    டி.பி.வி. டெக்னாலஜி இந்தியாவில் 22 இன்ச் முதல் 65 இன்ச் வரை புதிய பிலிப்ஸ் தொலைகாட்சி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய தொலைகாட்சிகளில் பிலிப்ஸ் காப்புரிமை பெற்ற ஆம்பிலைட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் 65 இன்ச் 65PUT6703S/94 மிகப்பெரிய மாடலாக இருப்பதோடு, இந்த எல்.இ.டி. டி.வி.க்களில் 3 பக்க அம்பிலைட் பொருத்தப்பட்டுள்ளது.

    தொலைகாட்சியின் பக்கவாட்டுகளில் ஆன்-ஸ்கிரீன் நிறங்கள் சுவரில் பிரதிபலிக்கச் செய்கிறது. இத்துடன் ஆம்பிலைட் மியூசிக் மோட் வசதி வழங்கப்பட்டுள்ளதால், அறையில் விர்ச்சுவல் சவுன்ட் மற்றும் மின்விளக்குகளை மிளிரச் செய்யும். புதிய டி.வி.க்களில் பிக்சல் பிரிசைஸ் ஹெச்.டி. வழங்கப்பட்டிருக்கிறது. இது புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்தி, அதிக தெளிவான காட்சியை பிரதிபலிக்கும்.



    பிலிப்ஸ் 4K டி.வி.க்கள் (6100/ 6700 சீரிஸ்) ஹெச்.டி.ஆர். பிளஸ் மற்றும் SAPHI வழங்கப்பட்டு இருப்பதால் டி.வி. மற்றும் தரவுகளை மிக எளிமையாக இயக்க வழி செய்கிறது. இதன் மைக்ரோ டிம்மிங் மென்பொருள் படத்தை 6400 வெவ்வேறு சூழல்களில் கண்டறிந்து, அதற்கு ஏற்ப தரத்தை மாற்றியமைக்கும்.

    இதனுடன் டி.டி.எஸ். ஹெச்.டி. (DTS HD) தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருப்பதால், சவுண்டு ஆப்டிமைஸ் செய்யப்பட்டு, ஆடியோ தரம் இயற்கையாக வெளிப்படுகிறது. 

    புதிய 22 இன்ச் ஃபுல் ஹெச்.டி. எல்.இ.டி. டி.வி. மாடல் விலை ரூ.9,990 முதல் துவங்கி டாப்-என்ட் 65PUT6703S 65-இன்ச் விலை ரூ.1,49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய தொலைகாட்சி மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் டிசம்பர் மாதம் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ×