என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pickle"
- விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார்.
- தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி செலுத்தினார். பின்னர் மறுநாள் 28.11.2022 அன்று ஆர்டர் கொடுத்தப்படி 25 பார்சல் சாப்பாட்டை ஆரோக்கியசாமி வாங்கினார். அதற்கு ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டு, சிறிய ரசீது எழுதி கொடுத்துள்ளார்.
அதன்பிறகு வீட்டிற்கு சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார்கள்.
அதில், ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.
- எலுமிச்சை, மாங்காய், பூண்டு, இஞ்சி ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க.
- இன்று மீனை வைத்து ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்)
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி
வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி
பூண்டு - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
வினிகர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிது
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மீனை நன்றாக சுத்தம் செய்து சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாக கழுவி ஈரத்தன்மை போனதும் அதன் மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
பின்னர் அதனுடன் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
5 நிமிடம் ஆனதும் அதில் அரை கப் வினிகர் சேர்த்து 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவை நன்கு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும்.
சுவையான மீன் ஊறுகாய் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளிச்சக்கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று புளிச்சக்கீரையில் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 4 கட்டு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
எள் - 3 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வற்றல் மிளகாய் - 4 அல்லது 5,
எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
புளிச்சக்கீரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கோங்குரா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து வதக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் ரெடியாகிவிடும்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 500 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.
அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).
10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.
இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.
இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நார்த்தங்காயை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும்.
- மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.
தேவையான பொருட்கள் :
நார்த்தங்காய் - 5,
வெல்லம் - 250 கிராம்,
பச்சை மிளகாய் - 4,
தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
* வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.
* எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.
* நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- ஊறுகாயில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது.
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. குறிப்பாக உலகிலேயே அதிக அளவு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்பது அடுத்த அதிர்ச்சி செய்தி…
இத்தகைய நீரிழிவு நோய் வருவதற்கு காரணம், இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோயின் அளவு அதிகமாக இருப்பது தான். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஊறுகாயில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது ஒருமுறை ஊறுகாய் சாப்பிடலாம். இதில் மிக அதிகமான அளவு சோடியம் இருக்கிறது. ஒரு ஊறுகாயில் கிட்டத்தட்ட 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது. இது ரத்த கொதிப்பை அதிகரிப்பது மட்டுமில்லாமல் பக்கவாதம், இருதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
ஊறுகாயில் உள்ள அதிகமான அளவு சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகப்படுத்துகிறது. மேலும் அதிகமான அளவு சோடியம் சில சமயம் வயிறு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகமான அளவு சோடியம் எலும்பில் உள்ள கால்சியத்தை வெளியேற செய்து எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) ஏற்படுத்தி எலும்பின் அடர்த்தியை இழக்கச் செய்து எலும்பு முறிவை ஏற்படுத்தலாம்.
அதனால் கலோரிகள், கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும் அதிகமான அளவு சோடியம் இதில் இருப்பதால் ஊறுகாயை நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஒருமுறை சேர்த்துக் கொள்ளலாம்.
உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயாளிகள் ஒருசில உணவுகளை சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- செரிமானக் கோளாறை நீக்கும்.
- சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய முறையில் இனிப்பு, புளிப்பு, உப்பு மற்றும் காரம் என நான்கு சுவையையும் ஒன்றாகக் கலந்து தயாரிக்கப்படுவது 'நெல்லி சுண்டா'. ஊறுகாயைக் குறிக்கும் சொல் 'சுண்டா'. 'நெல்லி சுண்டா' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 7
வெல்லம் - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி
சீரகத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - 2 அங்குலத் துண்டு
உப்பு - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்பு அதை ஆறவைத்து விதைகளை நீக்கி துருவிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், நெல்லிக்காய் துருவலுடன் வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
வெல்லம் கரைந்த பிறகு அதில் இஞ்சி விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நெல்லிக்காய் பொன்னிறமாக மாறும் வரை அடிப்பிடிக்கவிடாமல் கிளறவும்.
பின்னர் அந்தக் கலவையில் பெருங்காயத்தூள் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இப்போது சுவையான 'நெல்லி சுண்டா' தயார்.
இதைக் கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் சிறிது சாப்பிட்டு வரலாம்.
- கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.
- ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
எலுமிச்சை பழம் - ஐந்து
பச்சை மிளகாய் - பத்து
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
கடுகு - ஒரு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
சூப்பரான கேரட் ஊறுகாய் ரெடி.
- ஊறுகாய் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம்.
- பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை.
பண்டையகாலம் முதலே, ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. சிறு அளவு ஊறுகாய், முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சலித்தவர்களுக்கு, வித்தியாசமான சுவை கொண்ட 'சிக்கன் ஊறுகாய்' செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை. அசைவ பிரியர்களுக்கு பிடிக்கும் 'சிக்கன் ஊறுகாய்' செய்முறை இதோ...
பொரிப்பதற்குத் தேவையானவை:
எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கிராம்
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்கத் தேவையானவை:
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ¼ கப்
கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி
வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் - அரை மூடி
தாளிப்பதற்குத் தேவையானவை:
எண்ணெய் - 2 மேசைக் கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும்.
மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.
பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.
இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும்.
பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.
புளிப்பான மாங்காய் பெரியது - 1 கிலோ
தண்ணீர் - 2 லிட்டர்
சிட்ரிக் அமிலம் - 1 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணிநேரம் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.
இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.
புளிப்பும், இனிப்புமாக இருக்கும்.
சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.
கேரட் - கால் கிலோ
எலுமிச்சை பழம் - ஐந்து
பச்சை மிளகாய் - பத்து
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு தேகரண்டி
கடுகு - ஒரு தேகரண்டி
உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
கேரட்டை பெரிய பல் உள்ள துருவலில் துருவிக்கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் கேரட் துருவல், பச்சை மிளகாய், எலுமிச்சை பழம் சாறு, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து கொட்டி கிளறி பரிமாறவும்.
சூப்பரான உடனடி கேரட் ஊறுகாய் ரெடி.
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
இஞ்சி - விரல் நீளத்துண்டு,
பூண்டு - 5 பல்,
புளி - எலுமிச்சை அளவு,
நல்லெண்ணெய் - அரை கப்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை கரைத்து கொள்ளவும்.
காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
வேக வைத்த காய்கறிகளை ஈரம் போக உலர விடவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை போட்டு வதக்கவும்.
இதனுடன் வேக வைத்து உலர வைத்த காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.
சூப்பரான வெஜிடபிள் ஊறுகாய் ரெடி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்