search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pisces"

    • புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் .
    • கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவ மழை புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் பொழுது இங்கு அதிகப்படியான பாதிப்புகள் உண்டாகிறது . இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மான்டஸ் புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மரக்காணம் பகுதி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது .இதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்களான பைபர் படகு வலை போன்றவைகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    மேலும் கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். மரக்காணம் பகுதி கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் எக்கிய குப்பம் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்

    • கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    • வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லகூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி காரை க்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். 

    ×