என் மலர்
நீங்கள் தேடியது "Pitbull"
- ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது.
கர்நாடகாவில் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த ராஜ நாகத்துடன் பிட் புல் வகை வளர்ப்பு நாய் 'பீமா' போராடி சண்டையிட்டு, தனது உயிரை கொடுத்து உரிமையாளரின் குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளது.
ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷமந்த் கவுடா என்பவரின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ணை வீட்டில் உள்ள கோழிப்பண்ணையில் 12 அடி நீள ராஜநாகம் நுழைந்துள்ளது. அந்த இடத்தில் ஷமந்த் கவுடாவின் குழந்தை விளையாடி வந்துள்ளது. ராஜ நகத்தை கவனித்த வளர்ப்பு நாய் 'பீமா' ராஜநாகத்துடன் சுமார் 40 நிமிடங்கள் சண்டையிட்டு 10 துண்டுகளாக குதறி கொன்றது. இந்த சண்டையில் விஷம் ஏறி 'பீமா' உயிரிழந்தது.
வளர்ப்பு நாய் 'பீமா' குறித்து பேசிய அதன் உரிமையாளர், "பாம்புகளுடன் சண்டையிடுவது பீமாவுக்குப் புதிதல்ல. இந்த தோட்டத்தில் புகுந்த சுமார் 15 விஷ பாம்புகளை பீமா கொன்றுள்ளது" என்று தெரிவித்தார்.
- மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்தது
இந்தியாவில் பிட்புல், ராட்வீலர், புல்டாக், உள்ஃப் நாய்கள் மற்றும் டெரியர் உள்ளிட்ட ஆக்ரோஷ தன்மை கொண்ட வெளிநாட்டு இன நாய்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், வீடுகளில் ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் அத்தகைய இன நாய்களுக்கு கருத்தடை செய்யுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் மற்றும் மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என பீட்டா இந்தியா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு ரிட் மனுத் தாக்கல் செய்தது. அந்த வழக்கில், இது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளின் குழு ஒன்றை அமைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கால்நடை வளர்ப்பு ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளிநாட்டு இன நாய்கள் விற்பனைக்கு தடை செய்ய பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
- குழந்தைகளின் அலறலை கேட்ட வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிவ கணேஷ் காலனியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்திற்குள் ராஜ நாகம் ஒன்று நுழைந்துள்ளது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பாம்பை பார்த்ததும் அலறி அடித்து ஓடியுள்ளார்.
குழந்தைகளின் அலறலை கேட்ட பிட்புல் வகையை சேர்ந்த வளர்ப்பு நாய் ஜென்னி உடனடியாக அங்கு ஓடிவந்து ராஜநாகத்தை கடித்து கொன்றது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.