search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "planting ceremony"

    • அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்கி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய குழு உறுப்பினரும், கபிலர் மலை வட்டார ஆத்மா தலைவருமான கே.கே. சண்முகம் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தண்ணீர் ஊற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கலை சுந்தர்ராஜ், கபிலக்குறிச்சி ஊராட்சி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பழனிசாமி , ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள், நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
    • வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

    காங்கயம்:

    காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர்வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும் இதுவரை 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக 131-வது கட்டமாக வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ், சிவாஸ் பேப்பர் மில் சி.சண்முகராஜ், சபரி கன்ஸ்ட்ரக்சன் வி.தங்கமுத்து, அம்மன் கன்ஸ்ட்ரக்சன் சக்திவேல் முருகன், வீரசோழபுரம் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், காங்கயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    • சத்குரு பிறந்த நாளையொட்டி 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    சத்குரு பிறந்த நாளையொட்டி நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக ஈஷாவால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 132 விவசாய நிலங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்படுகிறது. நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலும் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும் வகையிலும் காவேரி கூக்குரல் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம் கடந்த 2020 ஆண்டில் இருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 2 லட்சத்திற்கும் அதிகமமான மரங்கள் நடப்பட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1.10 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 34 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி அருகே உள்ள பூசலபுரம் கிராத்தில் ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன், கிராம அலுவலர் ஜெயராணி ஆகியோர் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அன்னை தொண்டு நிறுவனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுடையார்பாளையம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உப கரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அன்னை தொண்டு நிறு வனம் சார்பில் நடை பெற்ற விழாவிற்கு, மேட்டுடையார் பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பொன்.செந்தில் குமார் தலைமை வகித்தார். அன்னை தொண்டு நிறுவன நிர்வாகி சி.ராதாசெல்வம் வரவேற்றார்.

    பெத்த நாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். செல்வம், க. சந்திரசேகரன் ஆகியோர் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர். வனச்சரகர் திருமுருகன் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் பராமரிக்க வேண்டிய முறை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

    வருவாய் ஆய்வாளர் நீதிபதி, சமூக ஆர்வலர் தும்பல் ஜீவா ஆகியோர், அன்னை அறக்கட்டளை சார்பாக, 10 மாணவ- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர். இந்த விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன், ஸ்ரீதேவி வெங்க டேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் சுசீலா நன்றி கூறினார்.

    • மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி ஊராட்சி சின்ன ராமேஸ்வரம் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 2500 மரக் கன்றுகள் நடப்பட்டது. அலங்காநல்லூர் பகுதியில் நாவல், புங்கை, வேம்பு, அத்தி உள்ளிட்ட 20 வகையான மர கன்றுகள் நட்டனர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பி னர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, பேரூராட்சி தலை வர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரமேஷ்பாபு, சாலை ஆய்வாளர்கள் பாஸ்கர், பாண்டி கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தவசதீஷ், வார்டு உறுப்பினர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன்படி திருப்பூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
    • இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி உட்கோட் டத்தில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் துரை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் காரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மனோசூரியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலைச்செல்வன், பொன்னுமலை, மாரியப்பன் மற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர் கவிதா, உதவிப்பொறியாளர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் 200 மரக்கன்றுகளும், அயோத்தியாப்பட்டிணம் – பேளூர்- கிளாக்காடு சாலை பகுதியில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.
    • வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார்.

    கடையம்:-

    கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் கோவில் அகத்தியர் தேரையர் போன்ற சித்தர்கள் வழிபட்ட பெருமையுடையது.

    இந்த முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் படிக்கட்டுகளில் நடந்து சென்று தான் மலை மீது உள்ள முருகன் கோவிலை அடைய முடியும். இந்த மலைக்கோவிலின் படிக்கட்டுகளில் இரு புறமும் சுமார் 1000 மரக்கன்றுகளை நட்டு மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு நிழல் ஏற்படுத்தி தருவது என தோரணமலை முருகன் கோவில் பக்தர்கள் குழு சார்பில் மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது.

    கீழப்பாவூர் முன்னாள் யூனியன் சேர்மன் வழக்கறிஞர் எஸ்.கே.டி.காமராஜ் கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு மரம் நடுவிழாவை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மரம் நடுவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ .செண்பகராமன் செய்திருந்தார்.


    • பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    வாழப்பாடி:

    தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

    • 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் பூமியில், பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வனம் இந்திய அறக்கட்டளை.

    மற்றும் பொதுமக்கள் இணைந்து 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7500 பனை விதைகள், 750 மாணவர்கள் மூலம் நடும் விழா நடைபெற்றது.இதில் பணிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன், வனம் அமைப்பின் நிர்வாகிகள் சுந்தர்ராஜன்,நாச்சிமுத்து, டி.எம்.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அருள்புரம் ஜெயந்தி பள்ளி மாணவர்கள், பணிக்கம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்.
    • கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர்.

    திருப்பூர் :

    விகாஸ் சேவா டிரஸ்ட், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோட்டரி சங்கம், வனம் இந்தியா பவுண்டேசன், கே.பி.என்.காலனி வாக்கர் கிளப் சார்பில் விகாஸ் சேவா டிரஸ்டுக்கு சொந்தமான திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள நிலத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. பல வகையான 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி வரவேற்றார். இனிவரும் காலத்தில் அடர்வனம் அமைப்பது மற்றும் பல மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நடுவது என முடிவு செய்யப்பட்டது.

    விழாவில் பள்ளியின் தாளாளர் ஆண்டவர் ராமசாமி பேசியதாவது:- விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.90 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது. கூலிபாளையம் பொதுமக்கள், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவர்களின் பெற்றோர் இணைந்து கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தை கடந்த 2003-ம் ஆண்டு எதிர்த்தனர். அதன்பிறகு அப்போதைய ஈரோடு கலெக்டரின் பரிந்துரைப்படியும், ஊர் மக்கள் கூறியதற்கு ஏற்பவும், விகாஸ் சேவா டிரஸ்ட் சார்பில் 14 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி திருப்பூர் மாநகராட்சிக்கு தானமாக கொடுத்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுகிறது.

    அதற்கு பதிலாக விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிர்புறம் உள்ள 8.50 ஏக்கர் நிலத்தை எங்கள் டிரஸ்டுக்கு பதில் நிலமாக மாற்றித்தர கடந்த 2006-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர், பரிந்துரை கடிதம் வழங்கினார். அதன் பின்னர் விகாஸ் சேவா டிரஸ்டின் பெயரில் கடந்த ஆண்டு நில கிரையம் செய்து சிட்டா, பட்டா மாற்றம் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

    திருநாவலூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை திருநாவலூர் அடுத்த தேவியானந்தல் கிராமத்தில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில்உள்ள ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருநாவலூர் யூனியன் தலைவர் சாந்தி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேசன், ஒன்றிய கவுன்சிலர் விஜய் ஆறுமுகம்ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஆளவந்தான் ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராணி ஏழுமலை, ஊராட்சி எழுத்தர் உமா மகேஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்துதேவியானந்தல் கிராமத்தில் பொது இடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி கிராமத்தில்நடைபெற்றது.

    ×