என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Planting saplings"
- கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்
- 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லடம் :
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி:
திருப்பூா் மாவட்டம் அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழகம் இயக்கத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
இதுகுறித்து அமைச்சா்கள் கூறியதாவது:-
தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 12 வகையான உள்நாட்டு மரக்கன்றுகள் வனத்துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த மரக்கன்றுகள் தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடப்பட்டு வளா்க்கப்பட உள்ளன. 2022 - 23ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் 203.95 ஏக்கா் விவசாய நிலங்கள் 49.50 ஏக்கா் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் 29.75 ஏக்கா் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என மொத்தம் 28,320 ஏக்கா் பரப்பில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றனா்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்தாா். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநா் தேஜஸ்வி, திருப்பூா் சரக வன அலுவலா் சுரேஷ் கிருஷ்ணன், மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
- அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை:
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பசுமை நிறைந்த மாசில்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரம் வளர்க்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
உடுமலை ஒன்றியத்துக்கான மரக்கன்றுகள் போடிபட்டியில் பண்ணை அமைத்து தயார் செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் எண்ணிக்கைக்கு தேவையான அளவு விதைகள், கன்றுகள் பராமரிப்பதற்கான மண், உரம் உள்ளிட்டவை அனைத்தும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.
திட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக மரக்கன்றுகள் நடும் வகையில் இடவசதியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து மரக்கன்றுகள் வழங்கப்படும். வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்