என் மலர்
நீங்கள் தேடியது "Plastic Goods"
- பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பெரிய கடை வீதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை திடீரென திருப்பூர் கே.எஸ்.சி பள்ளி வீதியில் உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது ஒரு கடையில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.இதேபோல் தொடர்ந்து கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.