search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plus two student victim"

    குனியமுத்தூரில் பால் வாங்க சென்ற பிளஸ்-2 மாணவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மைல்கல்லை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சந்தோஷ் (வயது 17). பிளஸ்-2 தேர்வு எழுதியுளளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரிடம் அவரது தாயார் பால் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

    இதனையடுத்து சந்தோஷ் பால் வாங்குவதற்காக நடந்து சென்றார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினடியாக சந்தோசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தோஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதகடிப்பட்டு அருகே விவசாய கிணற்றில் குளித்த பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர், தமிழக போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் தணிகைவேலன் (வயது 17). இவர், பி.எஸ்.பாளைத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தணிகைவேலன் தனது நண்பர்களுடன் மதகடிப்பட்டையொட்டி தமிழக பகுதியான எல்.ஆர். பாளையத்தில் முருகையன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

    இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கிணற்றில் இருந்து வெளியேறிய நிலையில் தணிகைவேலன் மட்டும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். விவசாயிகள் கிணற்றில் இறங்கி தேடியும் தணிகைவேலனை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து இதுபற்றி வளவனூர் போலீசாருக்கும், விழுப்புரம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் தணிகைவேலனை பிணமாக மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×