search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police did not detect"

    • கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்கள் அனைத்து வசதிகளுடனும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
    • போலீசார் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விழுப்புரம்: 

    திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ரோசனை, தீவனூர், மேல்பாக்கம்,ஆகிய பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள்ளச் சந்தையில் விற்கப்படும் மது பாட்டில்களுடன், மது பிரியர்கள் அமர்ந்து குடிக்கும் அளவிற்கு மினரல் வாட்டர் தண்ணீர் கேன், டம்ளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. ஆனால் அதனை காவல்து றை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


    அப்பகுதியில் உள்ள மதுபான கடை நா ள்தோறும் 12 மணிக்கு மேல் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு மதுபான கடை திறப்ப தற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த பகுதியில் சட்டவிரோதமாக காலை முதலே 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்ப டுகிறது. மேலும் ரோசனை பகுதியில் காலை நேரத்தில் இது போன்ற கள்ளத்தனமான மது பாட்டில்கள்மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×