என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inspector"

    பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #tamilnews
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், வந்தவாசியில் ஆர்.சி.எம். பள்ளிக்கூடத்தில் தாளாளருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி, பள்ளி தாளாளருக்கு கடந்த மாதம் ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் ஆஜராகவில்லை.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார். மேலும், பள்ளிதாளாளரை வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, வருகிற திங்கட்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #tamilnews
    உத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே ஒரு கிராமத்தின் வயல்வெளியில், பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்கள் கிடந்தன. அதைக்கண்டு, கிராம மக்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆத்திரம் அடைந்தனர்.

    பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர். பசு மற்றும் கன்றுக்குட்டியின் உடல் பாகங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



    தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது, ஒரு கும்பல், போலீசாரை நோக்கி கற்களை வீசியது. அருகில் இருந்த புறக்காவல் நிலையத்துக்கும், வாகனங்களுக்கும் தீவைத்தது.

    நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும், கல் வீச்சு மேலும் அதிகரித்தது. புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங், கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 2 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல், காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பத்வால் கிராமத்தில் 8 பசுக்கள் மற்றும் எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற ஒரு சரக்கு லாரியை ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்தியது.

    லாரியில் இருந்த கால்நடைகளை கீழே இறக்கியது. பின்னர், அந்த லாரிக்கு அக்கும்பல் தீவைத்தது. லாரி டிரைவரும், கிளனரும் தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர், அந்த கும்பல், பசு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜம்மு-பதன்கோட் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.

    இதற்கிடையே, பக்கத்து மாவட்டமான சம்பாவில், பசு கடத்தல்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 16 கால்நடைகளை மீட்டனர். மற்றொரு சம்பவத்தில், வாகனத்தில் இருந்து 3 கால்நடைகளை போலீசார் மீட்டனர். #CowSlaughter #Bulandshahr #PoliceInspector #Riots 
    குமரியில் வாட்ஸ்- அப்பில் பெண்ணுடன் ஆபாசமாக பேசியது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகளிர் போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ஒருவர், இளம்பெண் ஒருவருடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசும் காட்சிகள் கடந்த ஜூலை மாதம் வாட்ஸ்- அப்பில் பரவியது.

    இச்செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது பற்றி விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில் நடந்த விசாரணையில் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேசியது கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் என்பது தெரிய வந்தது. அவர் பேசிய பெண், நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

    வீடியோ காலில் சீருடையில் இன்ஸ்பெக்டர் பேசியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டது.

    போலீஸ் உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்ஸ்பெக்டருடன் வீடியோ காலில் பேசிய பெண், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த பெண் தாக்கல் செய்த வழக்கில் தன்னை அவதூறாக பேசிய இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, புகாருக்கு ஆளான கருங்கல் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி இது தொடர்பாக விசாரணை நடத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் பென்சாம் மீது இந்திய தண்டனை சட்டம் 354(ஏ)(டி), பெண்ணை மானபங்கபடுத்தும் விதத்தில் பேசுதல், 506/1 கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்ப சட்டம் 67 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 4 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

    செக்ஸ் புகார் தொடர்பாக பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குமரி மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    குமரி மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    நாகர்கோவில்:

    சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது அதிகாரிகள் குறித்த சர்ச்சையான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் ஒரு போலீ்ஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவரின் ஆபாச பேச்சு வீடியோ காட்சிகள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    அந்த வீடியோ, 2 பகுதிகளாக வெளியாகி உள்ளது. முதல் வீடியோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் டிப்-டாப்பாக காட்சி அளிக்கிறார். தனது செல்போன் மூலம் அவர் ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்கிறார்.

    எதிர்முனையில் பேசிய பெண்ணின் படம் தெரியாத அளவுக்கு வீடியோவில் மறைக்கப்பட்டு உள்ளது. பேச்சின் இடையே அந்த இன்ஸ்பெக்டர் மிகவும் ஆபாசமாக பெண்ணிடம் பேசுகிறார்.

    அடுத்த வீடியோவில் அந்த இன்ஸ்பெக்டர் சீருடையை கழற்றி விட்டு அரை நிர்வாண நிலையில் கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த இளம்பெண்ணுடன் மீண்டும் தனது ஆபாச பேச்சை தொடருகிறார். இந்த முறை ஆபாச செய்கைகள் எல்லை மீறுகின்றன.

    சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இந்த வீடியோக்கள், குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையில் சிக்கி இருக்கும் இன்ஸ்பெக்டர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    இது குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர் விடுமுறையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. #tamilnews
    ஜவுளி வியாபாரியை தாக்கியது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் அலி அக்பர். ஜவுளி வியாபாரி. இவர், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு என் மீது மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற நான், கோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்திட சென்றேன். அப்போது இன்ஸ்பெக்டர் சரவணன், என்னிடம் ரூ.80 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். இல்லாதபட்சத்தில் என் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விடுவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க மறுத்த என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டி தாக்கினார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது இன்ஸ்பெக்டர் சரவணன் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. எனவே, அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம். சரவணன் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×