என் மலர்
நீங்கள் தேடியது "police man wife"
போலீஸ்காரர் மனைவியிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஒத்தக்கடை அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அமுது (வயது 32). செந்தில்குமார் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரராக உள்ளார்.
இந்த நிலையில் அமுது சாமி கும்பிடுவதற்காக அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.
அங்குள்ள விநாயகர் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் அமுதுவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இது தொடர்பாக அமுது ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து அமுதுவிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையரை வலைவீசி தேடி வருகிறார்.
போலீஸ்காரர் மனைவியிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.