search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal bonus"

    • பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
    • ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழக அரசின் பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைக்க முதல்வர் உறுதி செய்ய வேண்டும். 2012 ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளாக பொங்கல் போனஸ் வழங்கப்படாமல் இருப்பதை தேமுதிக கண்டிக்கிறது; இந்த முறையாவது பொங்கல் போனஸ் வழங்கத் தமிழக முதல்வரை தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
    • இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் மற்றும் பொங்கல் பரிசை வழங்க ரூ.163.81 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதில், 'சி' மற்றும் 'டி' பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதற்கான அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களாக இருந்து, குறிப்பிட்ட ஊதிய விகிதங்களின்படி ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும்; மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள், அதாவது 1.10.2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,

    சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள் அல்லது துப்புரவுப் பணியாளர்கள் அல்லது துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட மற்றும் அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ஒட்டு மொத்த பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 வழங்கி அரசு ஆணையிடுகிறது.

    இந்த அரசாணை தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, 2.1.2025 நாளன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

    உலேமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித் தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித் தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள், பணியில் இருக்கும் பணியாளர்களுக்குப் பொருந்தக்கூடிய தற்காலிக மிகை ஊதியம் (தற்காலிக போனஸ்) பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்,

    'ஏ' மற்றும் 'பி' பிரிவு பதவிகளில் இருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்பட ஓய்வூதிய முன்னோடித் திட்டத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்தப் பொங்கல் பரிசுத் தொகை அரசு செலவில் பணவிடை மூலம் அனுப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரத்தில் இயங்கிவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உறுப்பினர்க ளுக்கு பொங்கல்போன ஸ்மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் குமார் வரவேற்றார்.பேரூராட்சி வார்டு மன்ற உறுப்பினர் நரசிம்மன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் கலந்து கொண்டு மேற்படி சங்கத்திலுள்ள பால் உற்பத்தியாளர்ளுக்கு ஊக்கத்தொகையினை போனசாக வழங்கினர்.

    போனஸ்தொகை யானது பால் உற்பத்தியில் லிட்டருக்கு ரூ. 1 என கணக்கிடப்பட்டு ரூ, 7-லட்சத்து 94-ஆயிரத்து 370-ரூபாய் 429 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதில் ஆய்வாளர் கீதா, நிர்வாக குழு உறுப்பினர்கள், முன்னாள் செயலாளர் குமார் மற்றும் ஈராளச்சேரி, பெருகரும்பூர், துறைபெரும்பாக்கம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • தமிழக அரசுப்பணியில் உள்ள சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

    அதன்படி,

    * பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * முழு மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

    * சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி என அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #TNGovernment #PongalBonus
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழக நிதி துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. #TNGovernment #PongalBonus
    ×