search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Poochattu ceremony"

    • கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற மகாமாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.

    முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 4ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மற்றும் பூச்சட்டி எடுத்து ஆடுதல் நடந்தது. 5ந் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மனை அழைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முளை ப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளா னோர் கலந்துகொண்டனர்.

    • அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
    • அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    அவிநாசி :

    அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.இதற்காக அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னி ட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×