என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Poo Ramu"
- இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிடா’.
- இப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கிடா' (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ளது 'கிடா' திரைப்படம். இப்படம் வெளியாகுவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'கிடா' திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா.
- இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட நடிகருமான வ.ராமு மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
- திரைப்பட நடிகர் வ.ராமு மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட நடிகருமான வ.ராமு மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த தெரிவித்துக் கொள்கிறது.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், திரைப்பட கலைஞர்களுக்கும் தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடிகர் பூ ராமு 2008-ல் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
- பல்வேறு படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.
சென்னை:
தமிழ் திரையுலகின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.
இதற்கிடையே, உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூ ராமு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இந்நிலையில், நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்கொண்ட நடிகர் பூ ராமு மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் பூ ராமு 2008-ஆம் ஆண்டு சசி இயத்தில் வெளியான பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
- சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் திரையுலகின் குணச்சித்திரக் கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ஆம் ஆண்டு சசி இயத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நீர்பறவை, தங்க மீன்கள், பரியேரும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார்.
இந்நிலையில் நடிகர் பூ ராமு உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்