என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Poonam Kaur"
- நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
- சமந்தாவை தொடர்ந்து நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். ஸ்டூடியோவிலும் குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் பேசிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்தி உள்ளனர்.
![பூனம் கவுர் பூனம் கவுர்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/03/1801204-kaur2.webp)
பூனம் கவுர்
இந்த நிலையில் நடிகை பூனம் கவுரும் பைப்ரோமியால்ஜியா என்ற அரிய வகை நோயால் பாதித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பூனம் கவுர் தமிழில் 2007-ல் வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
![பூனம் கவுர் பூனம் கவுர்](https://media.maalaimalar.com/h-upload/2022/12/03/1801206-kaur.webp)
பூனம் கவுர்
பூனம் கவுரை தாக்கியுள்ள நோயால் சோர்வு, தூக்கம், மன நிலை பிரச்சினைகள் ஏற்படும் என்றும், வாழ்நாள் முழுவதும் இந்த நோய் பாதிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது பூனம் கவுர் உடல் வலியால் அவதிப்படுவதாக நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். அவர் விரைவில் குணம் அடைய ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201807241843198020_1_poonam-3._L_styvpf.jpg)
தமிழில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கில் பிரபலமான நடிகை. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர் திடீர் என்று “டுவிட்டரில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். எப்போது திரும்பி வருவேன் எனத் தெரியாது’ என்று பதிவிட்டு வெளியேறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் ஆபாச இணையதளம் ஒன்றில் பூனம் பற்றி தவறாக பதிவிட்டிருந்தனர். இதன் பின்னணியில் இயக்குனர் ஒருவர் இருப்பதாகக்கூறி அவரை திட்டி பதிவிட்டிருந்தார் பூனம். அந்த இயக்குனர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. அதன் பின் பூனம் கவுர் சமூக வலைதளங்களிலும், போனிலும் மிரட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனால் தான் டுவிட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவரைப் போலவே தெலுங்கு முன்னணி கதாநாயகன் பவன் கல்யானின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் டுவிட்டரில் இருந்து சமீபத்தில் விலகினார். அவரும் மற்றொரு காரணத்துக்காக மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #PoonamKaur
![](https://img.maalaimalar.com/InlineImage/201805131758253503_1_poonam-1._L_styvpf.jpg)