என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pope Francis"

    • சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார்.
    • தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.

    கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    5 வார கால சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் ஆனார்.

    38 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து திரும்பிய போப் பிரான்சிஸ், வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் மக்களை சந்தித்து பேசினார்.

    • பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

    வாடிகன் சிட்டி:

    போப் ஆண்டவர் பிரான்சிஸ், உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி, இத்தாலியில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு நடந்த பரிசோதனையில் 2 நுரையீரலிலும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது 2 முறை உயிருக்கு ஆபத்தான கட்டத்தை சந்தித்தார். தீவிர சிகிச்சை மூலம் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் அபாய கட்டத்தை தாண்டி இருந்தார்.

    கடந்த 6-ந்தேதி போப் பிரான்சிஸ் ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டார். அதன்பின் 16-ந்தேதி அவரது புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டது.

    இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, போப் பிரான்சிஸ் உடல் நிலை சீராக உள்ளது. இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.

    அவர் ஒரு மாதத்துக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2 மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும். அவர் பெரிய கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

    38 நாட்களுக்கு பிறகு போப் பிரான்சிஸ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து திரும்புகிறார். வாடிகனில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்புவதற்கு முன்பு ஜெமெல்லி மருத்துவமனையில் இருந்தவாறு போப் ஆசீர்வாதம் வழங்குவார் என வாடிகன் தெரிவித்து உள்ளது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவர் முதல்முறையாக பொது வெளியில் மக்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக ஜெமெல்லி மருத்துவமனை தெரிவித்தது.
    • போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்தனர்,

    ரோம்:

    கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிப்ரவரி 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு நுரையீரல் தொற்று, சுவாச குழாய் பாதிப்பு என இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. போப் பிரான்சிஸ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது என கடந்த வாரம் ஜெமெல்லி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவாது முதல் புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.

    அதில் போப் பிரான்சிஸ் வழிபாட்டு உடைகளின் வழக்கமான ஊதா நிற ஸ்டோலை அணிந்து, மருத்துவமனை தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

    ஜெமெல்லி மருத்துவமனையின் 10-வது மாடியில் உள்ள போப்பாண்டவர் குடியிருப்பில் மற்ற பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து குழந்தைகள் பலர் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக போப் பிரான்சிஸ் கூறுகையில், எனக்காகப் பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களைச் சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார் என தெரிவித்தார்.

    • ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம்.
    • ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    வாடிகன் :

    வாடிகன் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது:-

    ஆபாச படங்கள் பார்ப்பது பலருக்கும் இருக்கும் ஒரு தீமையான பழக்கம். பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச படங்களை பார்க்கிறார்கள். ஆபாச படங்கள் பார்ப்பது தூய்மையான இதயத்தை பலவீனப்படுத்துகிறது.

    டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களை தேவைக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதில் அதிக நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிற்றின்ப ஆபாசத்திற்காக அவற்றை பயன்படுத்தக்கூடாது. உங்களின் செல்போனில் இருந்து ஆபாச படங்களை நீக்குங்கள். எனவே உங்கள் கையில் சலனம் இருக்காது.

    இவ்வாறு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசினார்.

    • உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
    • நமது பொதுவான வீட்டை சாம்பல் மற்றும் வெறுப்பால் மூடுகிறோம்.

    மனாமா :

    பஹ்ரைன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் போப் பிரான்சிஸ் நேற்று தலைநகர் மனாமாவில் அந்த நாட்டின் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவில் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வமத உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் "உலகம், 2 எதிரெதிர் கடல்களை போல பிரிந்து செல்வதாகத் தோன்றினாலும், மதத் தலைவர்கள் ஒன்றாக இருப்பது அவர்கள் மோதலுக்குப் பதிலாக சந்திப்பதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்து, ஒரே நீரில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது. உலகின் சிறந்த மதங்கள் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்" என்றார்.

    தொடர்ந்து உக்ரைன் போர் குறித்து பேசிய போப் ஆண்டவர், "நாம் குழந்தைத்தனமான காட்சியைக் காண்கிறோம். மனிதகுலத்தின் தோட்டத்தில், நமது சுற்றுப்புறங்களை வளர்ப்பதற்குப் பதிலாக, நெருப்பு, ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகள் போன்ற சோகத்தையும் மரணத்தையும் தரும் ஆயுதங்களுடன் விளையாடுகிறோம். நமது பொதுவான வீட்டை சாம்பல் மற்றும் வெறுப்பால் மூடுகிறோம். சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் உக்ரைனில் ரஷியாவின் போருக்கு முடிவுகட்டுதல் அவசியமாகும்" என கூறினார்.

    இந்த மாநாட்டில் முன்னணி முஸ்லிம் இமாம்கள், உலகின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் தலைவர் மற்றும் நீண்ட காலமாக மதங்களுக்கு இடையேயான உரையாடலில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மதகுருக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    ரோம் :

    உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

    அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் ஆண்டவர் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

    அப்போது அவர், "உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.

    இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள்.
    • அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    வாஷிங்டன்:

    உக்ரைன் போர் தொடங்கி 10 மாதங்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசியதாவது:-

    போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.

    அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை.

    இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.

    • சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
    • மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார்.

    ரோம் :

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். நேற்று முன்தினம் தனது 86-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர், சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார்.இந்தநிலையில் ஸ்பெயின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போப் பிரான்சிஸ், தான் 2013-ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, உடல் நலப்பிரச்சினையை முன்வைத்து பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எனது பணி துறத்தல் கடிதத்தை அப்போதைய வாடிகன் வெளியுறவு செயலாளர் டார்சிசியோ பெர்டோனிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன். அதாவது மருத்துவ காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ எனது கடமைகளை செய்ய முடியாமல் போனால், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தேன்' என தெரிவித்தார்.

    வாடிகன் வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து டார்சிசியோ பெர்டோன் பின்னர் விலகியதால், அந்த கடிதத்தை தற்போதைய செயலாளர் பியட்ரோ பரோலினிடம் ஒப்படைத்திருப்பார் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.வாடிகன் வரலாற்றில் மிக அரிய நிகழ்வாக முந்தைய போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகி இருந்தார். அதை போப் பிரான்சிஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கும் ஏழ்மைக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது.
    • இயேசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார். ஏழையாக வாழ்ந்தார்.

    வாடிகன்:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார்.

    முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். சிறப்பு பிரார்த்தனையில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்துக்குள் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேவாலயத்துக்கு வெளியே 4 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர்.

    குழந்தை இயேசு சொரூபத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் முத்தமிட்டார். அவர் சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    நன் உலகில் உள்ள ஆண்களும், பெண்களும், செல்வம் மற்றும் அதிகாரத்திற்கான பசியில் தங்கள் அண்டை வீட்டாரையும் தங்கள் சகோதர-சகோதரிகளையும் கூட சுரண்ட பார்க்கின்றனர். எத்தனை போர்களை மனிதர்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

    இன்று கூட பல இடங்களில் மனித கண்ணியமும், சுதந்திரமும் இழிவாக நடத்தப்படுகின்றன. எப்போதும் போல இந்த மனித பேராசையால் பாதிக்கப்படுபவர்கள். பலவீனமானவர்கள் மற்றும் பாதிக்கக்கூடிய சூழலில் உள்ளவர்தான். எல்லாவற்றுக்கும் மேலாக போர், ஏழ்மை, அநீதி ஆகியவற்றால் குழந்தைகள் தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை நினைத்து கவலை கொள்கிறேன்.

    பணம், அதிகாரம் மற்றும் இன்பத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் உலகம். சிறியவர்களுக்கு, பிறருக்காக, ஏழை, மறுக்கப்பட்ட பல குழந்தைகளுக்கு இடமளிக்காது.

    தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசுவுக்கும் ஏழ்மைக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது. இயேசு கிறிஸ்து ஏழையாக பிறந்தார். ஏழையாக வாழ்ந்தார். ஏழையாகவே உயிர் துறந்தார். எனவே பிறருக்கு நல்லதை செய்யாமல் யாரும் இந்த கிறிஸ்துமசை கடந்து செல்ல வேண்டாம்.

    யாரும் பயம், ஊக்கமின்மையை தங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த பெனடிக்ட்டினுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    வாடிகன்:

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ்.

    இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாடிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதுபற்றி இப்போதைய போப் பிரான்சிஸ் வாடிகன் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையின் போது தெரிவித்தார்.

    அப்போது போப்பாண்டவர் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுவாச தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்க்கு கொரோனா தொற்று இல்லை.
    • போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதி.

    வாடிகன்சிட்டி:

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86). ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு திடீரென்று சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

    அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டதாக இத்தாலி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

    இந்தநிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெ்றறு வருவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாடிகனின் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறும்போது, போப் பிரான்சிஸ் சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டார். அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் சில நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்றார்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் முதுமை காரணமாக உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ளார். மூட்டு வலியால் சக்கர சைக்கிளில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், அவரது பெருங்குடலின் 13 அங்குலம் அகற்றப்பட்டது.

    போப் பிரான்சிஸ் இளைஞராக இருந்த போது சுவாச நோய் தொற்று காரணமாக ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து இன்று காலை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    • போப் பிரான்சிஸ் சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.
    • கடந்த புதன்கிழமை கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ரோம் :

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமப்படும் அவருக்கு சுவாச தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அவரது உடல் நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று (சனிக்கிழமை) 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி நேற்று தெரிவித்தார்.

    போப் பிரான்சிசின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு உணவுக்கு அவர் பீட்சா சாப்பிட்டதாகவும் மேட்டியோ புருனி கூறினார்.

    ×