என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pope Francis"

    • போப் பிரான்சிஸ் சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார்.
    • கடந்த புதன்கிழமை கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ரோம் :

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 86), சமீப காலமாக சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமப்படும் அவருக்கு சுவாச தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் அவரது உடல் நிலையில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்று (சனிக்கிழமை) 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார் என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி நேற்று தெரிவித்தார்.

    போப் பிரான்சிசின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், நேற்று முன்தினம் இரவு உணவுக்கு அவர் பீட்சா சாப்பிட்டதாகவும் மேட்டியோ புருனி கூறினார்.

    • 12 இளம் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் தண்ணீரில் கழுவினார்.
    • கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் முத்தமிட்டார்.

    வாடிகன்:

    போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். ரோம் நகரின் புறநகர் பகுதியான காசல் டெல் மார்மோசில் இளம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறைச் சாலை உள்ளது.

    இந்த ஜெயிலில் நடந்த நிகழ்ச்சியில் அங்குள்ள 12 இளம் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் தண்ணீரில் கழுவினார். பின்னர் அவர் கைதிகளின் பாதங்களை முத்தமிட்டார். இதில் கத்தோலிக்கர் அல்லாத பிற மதத்தினரும், பெண்களும் கலந்து கொண்டனர்.

    • வாடிகன் நகரில் கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • இதனால் புனித வெள்ளி நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை.

    வாடிகன்:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி உலகமெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிகன் நகரில் போப் தலைமையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

    போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வாடிகனில் கடுங்குளிர் நிலவுவதால் போப் பிரான்சிஸ் புனித வெள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வாடிகன் செய்தி தொடர்பாளர் மெட்டா புருனி தெரிவித்தார். ஆனாலும் வழக்கமான பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

    • தங்களது கற்பனையால் தங்களுக்கு பிடித்தவர்களை செயற்கை தொழில் நுட்பத்தால் உருவம் கொடுத்து வரைந்து வருகிறார்கள்.
    • போப் பிரான்சிஸ் பரபரப்பான சாலையில் செல்வது போல புகைப்படங்கள் வெளியாகின.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசூர வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எழுதவும், வரையவும் முடியும் என்பதால் டிஜிட்டல் ஓவியர்களுக்கு வரப்பிரசாதாமாக மாறியுள்ளது. அவர்கள் தங்களது கற்பனையால் தங்களுக்கு பிடித்தவர்களை செயற்கை தொழில் நுட்பத்தால் உருவம் கொடுத்து வரைந்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். அவை வைரலாக பரவுகின்றன.

    அந்த வகையில் ரோமன்கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிசை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. அதில் போப் பிரான்சிஸ் பரபரப்பான ஒரு தெருவில் மோட்டார் சைக்கிள்களில் செல்வது போலவும், சாலையில் செல்வது போலவும் புகைப்படங்கள் வெளியாகின.

    அதுமட்டுமல்லாது போர் விமானத்தில் பறக்க தயாராவது, கூடைப்பந்து, ஸ்கெட் போடிங் விளையாடுவது, தற்காப்பு கலைகள் பயிற்சி செய்வது போன்ற போப்பிரான்சிசின் பல்வேறு புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன.

    • அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
    • வழக்கமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

    வாடிகன் சிட்டி :

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) இந்த வாரம் முழுவதும் நெருக்கமான பணி அலுவல்களை கொண்டிருந்தார். குறிப்பாக நேற்று முன்தினம் இத்தாலி நாட்டு ஆயர்கள் மாநாடு, பள்ளி அறக்கட்டளை சந்திப்பு மற்றும் பல்வேறு உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

    அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்விலேயே இருந்தார். எனவே வழக்கமான நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்து விட்டார். இதில் முக்கியமாக, வழக்கமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. அவரது உடல் நலம் குறித்து மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • போப் பிரான்சிஸ் குடலில் தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வருகிறார்.
    • லேப்ரோடமி என்பது அடிவயிற்றைத் திறந்து செய்கிற அறுவை சிகிச்சை ஆகும்.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் (வயது 86), தள்ளாத வயதிலும், உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் 'சியாட்டிகா' நரம்பு வலியால் அவதிப்பட்டு வருவதால் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ஓராண்டு காலத்துக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் வாடிகன் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தன்னைக் காண வந்த பொதுமக்களைச் சக்கர நாற்காலியில் வந்து சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

    அதையடுத்து அவர் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டியதிருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

    இளம் வயதிலேயே போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் ஒரு நுரையீரலில் சிறிய பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போப் ஆண்டவருக்கு நடக்க உள்ள குடல் அறுவை சிகிச்சை பற்றி வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிஸ் குடலில் தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வருகிறார். அவருக்கு குடல் அடைப்பு பிரச்சினைக்காக லேப்ரோடமி மற்றும் அடிவயிற்று சுவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது" என தெரிவித்துள்ளது.

    லேப்ரோடமி என்பது அடிவயிற்றைத் திறந்து செய்கிற அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை, அவரது பிரச்சினைகளை அறுவை சிகிச்சை நிபுணர் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் முந்தைய வடுவில் இருந்து உருவான குடலிறக்க பிரச்சினையால் அவதியுறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு போப் ஆண்டவர், இதே ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவரது பெருங்குடலில் 33 செ.மீ.அளவுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அப்போது அவரது பெருங்குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், குறுகலாக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அவர் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

    இப்போதும் அவர் பல நாட்கள் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
    • கடந்த 7-ந் தேதி அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது. போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

    சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    • போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்கிறார்.

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது.

    போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

    அதில், போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டை வீல் சேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளிடம் பேசியது தெரிந்தது.

    டிஸ்சார்ஜ்க்கு பிறகு ஜூலை மாதம் முழுவதும் போப் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்லவுள்ளார். தொடர்ந்து, ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மங்கோல்யா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஆபரேஷன் முடிந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.

    • போப் பிரான்சிஸ் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
    • செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார்.

    வாடிகன்சிட்டி :

    குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த அவர், கடந்த 16-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வாடிகன் திரும்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், நேற்று வரை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனினும் நேற்று அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட ஏராளமானோர், போப் ஆண்டவரை கைதட்டி வாழ்த்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபோது தனக்கு உதவிய மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்தார்.

    போப் ஆண்டவர் தனது உரையில் கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். மேலும் உகாண்டாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலையும் கண்டித்தார்.

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது.
    • ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.

    வாடிகன்:

    போப் பிரான்சிஸ் கடந்த ஜூன் மாதம் குடல் இறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவர் உடல்நலம் தேறினார்.

    இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் நடந்த உலக இளையோர் தின கத்தோலிக்க விழாவில் பங்கேற்று விட்டு ரோம் திரும்பினார். அப்போது போப் பிரான்சிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அறுவை சிகிச்சைக்கு பிறகு எனக்கு உடல்நிலை நன்றாக இருக்கிறது. தையலும் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் தசைகள் வலுவாக்கும் வரை இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் வயிற்றில் பட்டை அணிந்திருக்க வேண்டும் என் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களையும் கடவுள் நேசிக்கிறார். ஓரினசேர்க்கையாளர்கள் உள்பட அனைவருக்கும் கத்தோலிக்க தேவாலயம் திறந்து இருக்கும். தேவாலயத்தில் ஒரே பாலின திருமணத்தையோ அல்லது ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களையோ அனுமதிப்பது இல்லை. சட்டத்தின்படி அவர்கள் ஒரு சில சடங்குகளில் பங்கேற்க முடியாது. விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் தேவாலயத்திற்குள் தங்கள் சொந்த வழியில் கடவுளை சந்திக்கிறார்கள்.

    இவ்வாறு போப் பிரான்சிஸ் கூறினார். பின்னர் அவர் வாடிகன் புறப்பட்டு சென்றார்.

    • நைஜரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மனைவி மற்றும் மகனுடன் அதிபர் பசோம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வாடிகன்:

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கடந்த ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் அதிபர் பசோம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    அதிபர் பசோம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நைஜரில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்ததாக அந்நாட்டு ராணுவம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தது. ராணுவத்தின் இந்தச் செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

    இதற்கிடையே, நைஜரின் புதிய ராணுவ ஆட்சிக்கும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுக்கள் சிறிதளவு முன்னேற்றத்தை அளித்துள்ளது என கூறப்படுகிறது.

    இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    மேலும், அனைவரின் நலனுக்காகவும் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

    ×