என் மலர்
நீங்கள் தேடியது "postponed"
கோவை:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணு பிரியா கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் வழக்கை கைவிடுவதாக கூறி கோவை தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்கொலை செய்து கொண் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ. முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் விஷ்ணு பிரியா தற்கொலை தொடர்பாக அதிகாரிகள் டார்ச்சர் தொடர்பான ஆதாரம் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றார். விஷ்ணு பிரியா தந்தை சார்பில் ஆஜரான வக்கீல் அருண்மொழி வாதாடும் போது, சி.பி.சி.ஐ.டி. விசாரித்தது போல் தான் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதில் உயர் அதிகாரி உள்பட 7 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை தன்மை தெரியும் என்றார். 7 பேரையும் அழைத்து விசாரணை நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக வருகிற 13-ந் தேதி முடிவு செய்யப்படும் என கூறிய நீதிபதி நாகராஜ் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார். #dspvishnupriyasuicidecase
தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணியும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த வழக்குகளின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி வருகிற 27-ந் தேதி இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்று அவர்கள் அறிவித்தனர். #AIADMK #SC
கஜா புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GovernmentLawCollege
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், இவ்வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க கேரளா ஐகோர்ட்டில் அவர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அனுமதித்த நீதிபதி விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். #JalandharBishop #FrancoMulakkal
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே சசிகலா, டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. அவர்களின் தரப்பில் மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி, மீனாட்சி அரோரா, ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் வாதாடினார்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோகத்கி, சி.எஸ்.வைத்தியநாதன் தங்கள் வாதங்களை முடித்த நிலையில் மூத்த வக்கீல் விஸ்வநாதன் வாதங்களை தொடர்ந்து வந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது விஸ்வநாதன் தன்னுடைய வாதத்தில், சசிகலா உள்ளிட்டோர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கட்சியின் அன்றாட நடைமுறையில் எந்த உரிமையும் கிடையாது. எனவே அவர்கள் கட்சியின் மீதும், சின்னத்தின் மீதும் எந்த உரிமையும் கோர முடியாது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் மீதான விசாரணையை 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #AIADMK #DelhiHighCourt
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் நடந்துள்ள ரூ.4 ஆயிரத்து 800 கோடி ஊழல் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் உள்பட ஐந்து நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகளை, முதல்-அமைச்சர் பழனிசாமியின் சம்பந்தி பி. சுப்பிரமணியம், உறவினர் நாகராஜன், செய்யாத்துரை, நண்பர் சேகர்ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார்.

அந்த மனுவில், ‘தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான டெண்டர் பணிகளை ஒதுக்கியதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவியையும், முதல்-அமைச்சர் பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். சட்டவிரோத ஆதாயங்களையும் பெற்றுள்ளார்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #EdappadiPalaniswami
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பாக பூவலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி எழுத்து வடிவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #Kudankulamnuclearpowerplant
அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20-ம் தேதிக்கு பதிலாக 23-ம் தேதி மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அலுவலம் இன்று இரவு அறிவித்துள்ளது. உறுப்பினர்கள் முன்னர் அனுப்பப்பட்ட அழைப்பிதழ்களுடன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIADMK
தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தே.மு.தி.க.வின் தலைமை செயற்குழு கூட்டத்தில் செப்டம்பர் 16-ந்தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அந்த மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMDK
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியை செய்யும் நாவிதர்கள், மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், இலவச மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக திருப்பதி கோவில் நாவிதர்கள் அறிவித்து இருந்தனர்.
இதையடுத்து நிதி மந்திரி ராமகிருஷ்ணுடு நேற்று மாலை நாவிதர்களை பேச்சு வார்த்தை நடத்த ஆந்திர தலைமை செயலகத்துக்கு அழைத்து இருந்தார்.
அதன்படி நாவிதர்கள் சங்கத்தினர் தலைமை செயலகம் சென்றனர். பேச்சு வார்த்தை முடிந்து நாவிதர்கள் வெளியே வந்தனர்.
அப்போது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு முதல்-மந்திரி சந்திரபாபு தலைமை செயலகத்துக்கு வந்தார்.
அவர் நாவிதர்களை பார்த்ததும் திடீரென்று ஆவேசம் அடைந்தார். “நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்? யார் உங்களை அழைத்தார்கள்? தலைமை செயலகம் கோவில் போன்றது.
இது என்ன மீன் மார்க்கெட்டா? கூட்டமாக வந்து இருக்கிறீர்கள் என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நாவிதர்கள் தங்கள் கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடுவிடம் கூறினர்.
இதனால் மேலும் ஆவேசம் அடைந்த சந்திரபாபு நாயுடு, சம்பளத்தை உயர்த்தி தர முடியாது. போய் வேலையில் சேருங்கள் என்று நாவிதர்களை பார்த்து எச்சரித்தப்படி பேசினார்.
மேலும் அவர்களை நோக்கி கையை காட்டி அருகில் சென்று ஆவேசமாக பேசியதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே பாதுகாவலர்கள் சந்திர பாபு நாயுடு அருகே நாவிதர்கள் வராதபடி தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் சந்திரபாபு நாயுடு தனது அறைக்கு சென்றார்.
நாவிதர்கள் கூறும் போது, “நாங்கள் தலைமை செயலகத்துக்கு வரக் கூடாதா? எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேச தான் வந்தோம். எங்களுக்கு மாத ஊதியம் தர ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்திற்கு முடி காணிக்கை மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. எங்களுக்கு சம்பளம் கொடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.
இதற்கிடையே முதல்-மந்திரி சந்திரபாபு சமாதானம் அடைந்து நாவிதர்கள் கோரிக்கைகள் பற்றி வருகிற 25-ந்தேதி பேச உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து திருப்பதி கோவில் நாவிதர்கள் இன்று தொடங்க இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் 11-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு அங்கு தயார் நிலையில் இருந்தது. சோர்வாக காணப்படும் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருந்தது.
முன்னதாக உண்ணாவிரதம் இருந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதற்காக அவர்களை அரசு அழைத்து பேசவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மத்தியில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொது செயலாளர் துரைப்பாண்டியன் பேசினார்.
இதனிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் முதல்-அமைச்சரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை எடுத்துக்கூற கோட்டையை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ஊர்வலமாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் நேற்று இரவு போலீசார் விடுவித்தனர். இதனை தொடர்ந்து இந்த போராட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஒத்திவைத்தனர். #jactogeo #hungerstrike