search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pound jewelry"

    பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தெற்கு வீதியில் வசிப்பவர் பழனி (வயது 42). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றார்.இவரது வீட்டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்திற்கு இன்று காலை சென்றவர்கள், பழனி வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பழனிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் திரு வண்ணாமலையில் இருந்து ஏனாதிமங்கலத்திற்கு பழனி விரைந்து வந்தார். மேலும், திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். போலீசாருடன் வீட்டிற்குள் சென்ற பழனி, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.

    மேலும், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் செல்வராஜ் தலைமை யிலான குழுவினரும், மோப்ப நாய் ராக்கியும் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் ராக்கி யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும், கைரேகை நிபுணர்கள் வீட்டிலிருந்த தடயங்களை சேகரித்தனர்.மேலும், பழனி வீட்டருகே உள்ள மேலும், 2 வீடுகளின் பின்பக்க கதவினை உடைக்கவும் கொள்ளையர் முயற்சித்துள்ளனர். கதவை உடைக்க முடியாததால், அந்த வீடுகளில் திருட்டு சம்பவம் ஏதும் நடக்கவில்லை.காய்கறி வியாபாரி பழனி, வீட்டினை பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட் டின் பின்புறமுள்ள கரும்பு தோட்டத்தின் வழி யாக வந்து, கதவினை உடைத்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித் திருக்கலாம் என்ற கோணத் தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொள்ளை சம்பவம், அருகில் இருந்த 2 வீடுகளில் திருட முயற்சி ஆகிய சம்பவங்கள் ஏனாதி மங்கலம் கிராம மக்களி டையே அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

    ×