என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Power Secretary"
- புதுவை மின்துறையில் நீண்டகாலமாக அடாக்கில் இருந்து வந்த உதவியாளர் பதவியை ரெகுலராக மாற்றம் செய்து அவர்களுக்கு வயர்மேன் பதவி உயர்வு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
- பணிநிரந்தரமற்ற வேலைக்கு கூலி என்ற முறையில் பணியாற்றியவர்களுக்கு அதை நீக்கம் செய்த நிரந்தர தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மின்துறையில் நீண்டகாலமாக அடாக்கில் இருந்து வந்த உதவியாளர் பதவியை ரெகுலராக மாற்றம் செய்து அவர்களுக்கு வயர்மேன் பதவி உயர்வு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
பணிநிரந்தரமற்ற வேலைக்கு கூலி என்ற முறையில் பணியாற்றியவர்களுக்கு அதை நீக்கம் செய்த நிரந்தர தன்மை ஏற்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றிக்கு ஐ.டி.ஐ. நலச்சங்க நிர்வாகிகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளே காரணம். இந்த வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட புதுவை அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, மின்துறை செயலர் அருண், சார்பு செயலர் முருகேசன், துறைத்தலைவர், அதிகாரி களுக்கு நலச்சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.