என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power star"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார்.
    • பணத்தை திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


    இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பிடிவாரண்ட் சென்னை, அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பலரை இதுபோன்று ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.
    • சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தெலுங்கு தேசம் கட்சியில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதில் 24 இடங்களை நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.

    பவன் கல்யாணை முதல்வராக வேண்டும் என நினைத்து தான் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கினர்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக வேண்டும் என பவன் கல்யாண் பேசுவது கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சினிமாவில் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாண் தற்போது பவர் இல்லாத மனிதர் ஆகிவிட்டார்.

    இதனால் தான் அவர் தன்னை முன்னிலைப்படுத்தாமல் சந்திரபாபு நாயுடுவை முன்னிலைப்படுத்த வந்துள்ளார். சந்திரபாபு நாயுடுவிடம் 25 சதவீத சீட் கூட பெற முடியாதவர் பவன் கல்யாண்.

    40 ஆண்டுகால அனுபவம் உள்ளதாக கூறிக் கொள்ளும் சந்திரபாபு நாயுடு கூட்டணி இல்லாமல் களம் இறங்கினால் படுதோல்வி ஏற்படும் என மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் பவர் ஸ்டார் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர், சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று மதியம் அவருக்கு திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமளையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ×