என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PrabhuDeva"

    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.


    பஹீரா

    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


    பஹீரா போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பஹீரா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


    • இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'.
    • 'பஹீரா' திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார்.


    பஹீரா

    பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


    பஹீரா

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் புதிய பாடலான 'குச் குச் ஹோத்தா ஹை' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.




    • ராஜமௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'.
    • இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்கர் விருது கிடைத்தது.

    ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.


    நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்)

    இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    பிரபு தேவா பதிவு

    அதுமட்டுமல்லாமல், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • குருதிபுனல் படத்தில் முதல் முதலாக டோல்பி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார்.
    • நடன இயக்குனரான சுந்திரம் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

    நடிகர் கமல்ஹாசன் சினிமாவின் மீது அதிகம் பற்று கொண்டவர். தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு கமல்ஹாசனுக்கு உண்டு. புது புது தொழில் நுட்பத்தை தமிழ் சினிமாவிற்கு அவர் எடுக்கும் படங்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். வெற்றியோ தோல்வியோ கமல்ஹாசன் அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார், புதுப்புது முயற்சிகளையும், சோதனைகளையும் செய்து கொண்டே இருப்பார்.

    முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு அவர் நடித்து வெளியான விக்ரம் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கணினியை வைத்து ரெக்கார்ட் செய்யப்பட்ட பாடல்கள். 1994 ஆம் ஆண்டு வெளிவந்த மகாநதி படத்தில் ஏவிட் என்ற எடிட்டிங் சாஃப்ட்வேரை அறிமுகப் படுத்தினார்.

    குருதிபுனல் படத்தில் முதல் முதலாக டோல்பி ஸ்டீரியோ சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தினார். லைவ் சவுண்ட் ரெகார்டிங் தொழில்நுட்பத்தை விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

    இந்நிலையில் கமல்ஹாசன் இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் பெருமையை போற்றும் வகையில் மார்ச் 20 ஆம் தேதி அபூர்வ சிங்கீதம் என்ற திரைப்பட விழா நடத்தினார்.

    இத்திரைப்படவிழாவில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் படங்களை திரையிட்டனர்.

    வைரமுத்து, லோகேஷ் கனகராஜ், சிதம்பரம், மணி ரத்னம், சுகாசினி போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் கமல்ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கமல்ஹாசன் நடன இயக்குனரான சுந்திரம் மாஸ்டருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் "அன்ணாத்த ஆடுறார்" அபூர்வ சிங்கீதம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுந்திரம் மாஸ்டரூடன் ஒத்தைகாலில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டேன் என்று பதிவு செய்திருக்கிறார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது

    வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.

    இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.

    விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.

    எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.

    விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    பிரபுதேவா - சரத்குமார்

    பிரபுதேவா - சரத்குமார்

    அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

    நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
    பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    பொன் மாணிக்கவேல்

    டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படம் கடந்த வருடமே வெளியாக இருந்தது. இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேவி 2’ படத்தின் விமர்சனம்.
    தேவி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக படம் ஆரம்பிக்கிறது. ரூபி பேயிடம் போட்ட ஒப்பந்தம் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டிற்குள்ளேயே தமன்னாவை வைத்திருக்கிறார் பிரபுதேவா. மீண்டும் பேய் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக ஜோசியர் ஒருவர் அறிவுரையின் படி தமன்னாவை மொரிசியஸ் அழைத்து சென்று வேலை பார்த்து வருகிறார் பிரபுதேவா.

    அங்கு ரூபி மீண்டும் தமன்னா உடம்பில் இருக்கிறதா என்று சில சோதனைகளை பிரபுதேவா செய்கிறார். ஆனால், ஏதும் இல்லாததால் மகிழ்ச்சியாக வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவை இரண்டு பேய் பிடிக்கிறது. இதையறிந்த தமன்னா, பிரபுதேவாவை எப்படி காப்பாற்றினார்? பேயின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, தனக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, நடனம் என அசத்தி இருக்கிறார். குறிப்பாக, பேய் தன்னுள் புகுந்தவுடன், அதற்கேற்ப அவர் காட்டும் உடல் மொழி அசத்தல்.

    நாயகியாக வரும் தமன்னா, மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் ரசிகர்களை சீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார். அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது. அதுபோல், மற்ற கதாநாயகிகளாக வரும் நந்திதா சுவேதா, டிம்பிள் ஹயாதி ஆகியோரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். கோவை சரளா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் ஆங்காங்கே ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்கள். 



    தேவி படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், 2வது பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆனால், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான். படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காமெடி படமாகவே எடுத்திருக்கிறார். ஆனால், பார்க்கிற நமக்குத்தான் ஏனோ சிரிப்பு வரவில்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக கையாளத் தெரிந்த விஜய், திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்திருக்கிறார். 



    அயனன்கா போஸின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. சாம் சி.எஸ்.-யின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘தேவி 2’ மிரட்டல் குறைவு.
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் முன்னோட்டம்.
    ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் `தேவி 2'.

    பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அயனங்கா போஸ், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - லெவ்லின் அந்தோணி கான்சால்வ்ஸ், சங்கீத் சத்யநாதன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்ட் சில்வா, மனோகர் வர்மா, பாடல்கள் - பிரபுதேவா & கார்கி, வசனம் - கிரேஸி மோகன், விஜய், தயாரிப்பு - டாக்டர் ஐசரி கே.கணேஷ் & ரவீந்திரன், எழுத்து, இயக்கம் - விஜய்.



    படம் குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது,

    "நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது. அது இப்போது தேவி 2 படத்தில் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தேவி 2 படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய கூறுகள் படத்தில் உள்ளன. இந்த கோடையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

    படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    தேவி 2 படத்தின் டிரைலர்:

    சினிமா பிரபலங்கள் மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். #PadmaAwards #Mohanlal #Prabhudeva
    ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    திரைத்துறை சார்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான், பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது.



    இந்த நிலையில், இன்று (11.3.19) டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்தார். மோகன்லால், பிரபுதேவா, ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலரும் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். #PadmaAwards #Padmashri #PadmaBhusan #KaderKhan #Mohanlal #ManojBajpayee #PrabhuDeva #ShankarMahadevan

    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா - நந்திதா நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவி 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Devi2 #Prabhudeva
    விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான தேவி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா - தமன்னா இரண்டாவது பாகத்திலும் இணைந்து நடித்துள்ளனர். 

    நந்திதா, கோவை சரளா, டிம்பிள் ஹயாட்டி, ஜெகன், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், யோகி பாபு, குரு சோமசுந்தரம், முரளி சர்மா, சஞ்சய் பாரதி, நாசர், சோனு சூட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    ஜி.வி.பிலிம்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்க, அயனன்கா போஸ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Devi2 #Prabhudeva

    அர்ஜுன்.எம்.எஸ். இயக்கத்தில் பிரபுதேவா - லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகி வரும் `யங் மங் சங்' படத்தின் முக்கிய சண்டைக்காட்சிகள் சீனாவில் படமாகி இருக்கிறது. #YangMangChang #Prabhudeva
    பிரபுதேவா நடித்த சார்லி சாப்ளின் 2 படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், அவர் தற்போது `யங் மங் சங்', `பொன் மாணிக்கவேல்', `தேவி 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இதில் `யங் மங் சங்' படத்தை அர்ஜுன்.எம்.எஸ். இயக்கி வருகிறார். இதில் பிரபுதேவா ஜோடியாக லக்‌ஷ்மி மேனனும், வில்லனாக பாகுபலி வில்லன் பிரபாகரும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமனன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.



    தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் அதிக பொருட்செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள். இதில் பிரபுதேவா வில்லன்லளுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்டு 1980களில் நடப்பது போன்ற கதையாக யங் மங் சங் உருவாகி வருகிறது.

    வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, பாசில், நிரஞ்சன் படத்தொகுப்பை கவனிக்கின்றனர். #YangMangChang #Prabhudeva #LakshmiMenon

    ×