search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Practice test"

    • 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.
    • வரும் 31ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இதனிடையே ,10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தேர்வுக்கு 10 நாட்களே உள்ள நிலையில் National Test Abhyas என்ற மொபைல் செயலியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.
    • பயிற்சித்தேர்வுகளில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவும், அதன் கட்டமைப்பும் புரிகிறது.

    திருப்பூர் :

    மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்த கல்வித்துறை சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

    தேர்வுக்கு 10 நாட்களே உள்ள நிலையில்National Test Abhyas என்ற மொபைல் செயலியை மத்திய அரசு வடிவமைத்துள்ளது.இது குறித்து மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:-

    பயிற்சித்தேர்வுகளில் பங்கேற்பதால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த தெளிவும், அதன் கட்டமைப்பும் புரிகிறது. நேரத்தை சரியாக பயன்படுத்த முடிவதுடன்சரியான விடையை தேர்ந்தெடுத்து நெகட்டிவ் மார்க்ஸ் விழாமல் தப்பிக்க உதவுகிறது. இதனால் தேர்வு நாளன்று தன்னம்பிக்கையுடன் கூலாகவும் பரீட்சை எழுத முடியும்.இந்த செயலியில் நுழைந்தால் 3 மணி நேரம் தொடர்ந்து எழுத வேண்டும். எப்போது வேண்டுமானாலும் பங்கேற்கலாம். உடனே ரிசல்ட் தெரிந்து விடும்.

    இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் என தனித்தனியாக மதிப்பெண்கள் அப்டேட் செய்து கொள்ளலாம்.சுய மதிப்பீடு செய்ய எளிதாக இருக்கும். மாணவர்களிடம் கம்ப்யூட்டர் இல்லை எனில் மொபைல் போன் செயலி மூலமாக பங்கேற்கலாம். கடந்த 2019ம் ஆண்டு முதல் வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன.நாடுமுழுவதும் 10லட்சம் பேர் இதுவரை இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்வுக்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். இருப்பினும்அரசு பள்ளி மாணவர்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு குறைவு.

    மாணவர்கள் தங்கள் அடிப்படை விவரங்கள் கொடுத்து உள்ளே நுழைந்தால் போதும். பாடப்பிரிவு வாரியாகஆண்டு வாரியாக வினாத்தாள்கள் இடம்பெற்றுள்ளன. விரும்பும் பாடத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதி சுயமதிப்பீடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×