என் மலர்
நீங்கள் தேடியது "Pradhan Mantri Awas Yojana"
- இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
- 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள பல்வேறு மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 2.5 லட்சம் ரூபாய் வரை பயனார்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்த திட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் திருமணமான 11 பெண்கள் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் தவணை தொகையை பெற்றுக் கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடியுள்ளார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தில் 2,350 பயனாளர்களுக்கு வீடு காட்டும் திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 பெண்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 40,000 பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது காதலர்களுடன் ஓடிப் போயுள்ளனர்.
இந்த விவகாரத்தை அடுத்து இம்மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணை பணம் கொடுப்பத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

அதேசமயம் அமராவதி, நாக்பூர், நந்தூர்பர், தானே, சோலாப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடினார்.
தானேவைச் சேர்ந்த பெண்களிடம் மோடி பேசும்போது, ‘உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, நாட்டில் வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய வலுசேர்க்கும்’ என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர். #ShirdiSaiBaba #Modi #PMAY
அனைவருக்கும் வீடு என்ற பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது 2022-ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டப்படுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த திட்டத்தின்படி மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரது படம் பதித்த டைல்ஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டிய வீடுகளில் பிரதமர் மோடி, முதல் மந்திரி சவுகான் ஆகியோரின் படங்கள் பதித்த டைல்ஸ்களை டிசம்பர் 20-ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். #PMAY #Modi #ShivrajSinghChouhan