என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Prayer Hall"
- அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பகுதியில், பெரும்பான்மை மக்கள் வசித்து வரும் பகுதியில், சிலர் அரங்கம் கட்ட அனுமதி வாங்கி, அதில் வழிபாட்டுக் கூடம் அமைப்பதாக, அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்தப் பகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடே ஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு, பெரும்பா ன்மையான மக்கள் வசிக்கும் பகுதியில் வழிபாட்டுத் தலம் அமைக்கக்கூடாது. இதனால் மதமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடைபெறும் என கூறியிருந்தார். இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாசலமூர்த்தி மற்றும் காளிவேலம்பட்டி பொதுமக்கள், கட்டிட உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வழிபாட்டு தலம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கட்டட உரிமையாள ர்களிடம், அரங்கம் அமைப்பதாக கூறி கட்டட அனுமதி பெற்று விட்டு தற்போது கட்டுமான ப்பணி நடைபெற்று கொண்டிரு க்கும்போது, ஜெபக்கூடம் கட்டுவதற்கு அனுமதி கேட்பதை ஏற்க முடியாது. மாவட்ட கலெக்டரின் மறு உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமானப் பணிகளை தொடரக்கூடாது என தாசில்தார் கட்டட உரிமையாளருக்கு அறிவுறுத்தினார். இதனை ஏற்று கட்டுமான பணிகள் நடைபெறாது என அவர்கள் தெரிவித்தனர்.