search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Predator Drone"

    • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது.
    • நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து நவீன டிரோன்களை (ஆளில்லா விமானம்) வாங்குவது தொடர்பாக இந்தியா இன்று முடிவு செய்ய உள்ளது.

    அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பலஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே அமெரிக்காவின் பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று முடிவு செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 21-ந் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்வதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சக கூட்டம் நடைபெறுகிறது.

    பிரதமர் மோடியின் அமெரிக்க வருகைக்கு முன்பாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசை அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகின.

    அமெரிக்க வெளியுறவுத் துறை, பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவிடம் கேட்டு கொண்டன. இதையடுத்து அமெரிக்க நவீன டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த டிரோன்கள் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஏவுகனைகளை ஏந்தி சென்று இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா தற்போது ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து டிரோன்களை குத்தகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. அந்த டிரோன்கள் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிக்க கடற்படைக்கு உதவுகின்றன.

    ×