என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Presidential Palace"

    • துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
    • ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

    துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

     

    கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .

    • 50 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • நாங்கள் இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம்

    2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் ஆசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன.

    கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்து வந்தது.

    இந்நிலையில் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் திரண்டு 50 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் மக்கள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

     

    கொடுங்கோலன் அசாத் வெளியேற்றப்பட்டதாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், டமாஸ்கஸ் நகருக்கு நாங்கள் சுதந்திரத்தை அறிவிக்கிறோம் என்று முழங்கினர்.

    இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கிளர்ச்சியாளர்கள் கொண்டாடும் படங்களை அந்நாட்டின் AFP டிவி வெளியிட்டுள்ளது.

     

     

     

    டமாஸ்கஸ் அதிபர் மாளிகை கைவிடப்பட்ட நிலையில் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

    மாளிகையில் உள்ள அசாத்தின் தந்தை ஹபீஸின் சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்துத் தள்ளினர். முன்னதாக இலங்கை மற்றும் வங்கதேசத்திலும் ஆட்சி கவிழ்ந்த பின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது ஒப்புநோக்கத்தக்கது.

    AFP தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஒரு டமாஸ்கஸ் வாசி, "நான் இந்த தருணத்தில் வாழ்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க டமாஸ்கஸ் குடியிருப்பு வாசி தெரிவித்தார்.

    நாங்கள் இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம், நாங்கள் சிரியாவிற்கு ஒரு புதிய வரலாற்றைத் தொடங்குகிறோம் என்று தெரிவித்தார்.

    கடந்த வாரம் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 111 பொதுமக்கள் உட்பட குறைந்தது 826 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் 370,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. #SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
    மாஸ்கோ:

    சோமாலியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்ஷபாப் பயங்கரவாதிகள் ஆயுத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் மத அடிப்படையிலான அரசை நிறுவ போராடி வருகின்றனர். இந்த நிலையில், அங்கு தலைநகர் மொகாதிசுவில் அதிபர் மாளிகை அருகே நேற்று வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இதில் அந்தப்பகுதியே குலுங்கியது.

    இந்த குண்டுவெடிப்புகளில் சிக்கி 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ்களில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

    இந்த கார் குண்டுவெடிப்புகள், உள்ளூர் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.#SomaliaBlast #DoubleBombing #PresidentialPalace
    ×