search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential polls"

    • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
    • காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கே நியமிக்கப்பட்டுள்ளார்

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் ஜூன் 15 முதல் ஜூன் 29 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். ஜூலை 18ஆம் தேதி வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதியும் நடைபெறும்.

    எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மல்லிகார்ஜூன் கார்க்கேவை அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் அந்த கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மித்த கருத்தை உருவாக்கும் பொறுப்பு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போர் குற்றங்கள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என இன்று அறிவித்துள்ளார். #GotabhayaRajapaksa #presidentialpolls #Lankapresidentialpolls
    கொழும்பு:

    இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த உச்சக்கட்ட போரை நிகழ்த்தியபோது அவரது தம்பி  ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் ராணுவ மந்திரியாக பொறுப்பு வகித்தார்.

    முள்ளிவாய்க்காய் போரின்போது பல்லாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட சதியில் கோத்தபய ராஜபக்சேவின் சதி முக்கியமானதாக கருதப்பட்டது. அவருக்கு எதிராக பல்வேறு போர் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

    தற்போது கனடா நாட்டில் வாழும் பாதிக்கப்பட்டவர் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.



    மேலும் தனது தந்தையை கோத்தபய ராஜபக்சே கொன்று விட்டதாக பிரபல பெண் பத்திரிகையாளரான அஹிம்சா விக்ரமதுங்கா என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இலங்கையை சேர்ந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அமெரிக்காவிலும் நிரந்தர குடியுரிமை உண்டு. இலங்கை அதிபர் பதவிக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சமீபகாலமாக அமெரிக்காவில் தங்கியிருந்த கோத்தபய ராஜபக்சே இன்று இலங்கை திரும்பினார்.

    தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிபர் தேர்தலில் போட்டியிடுதற்கு வசதியாக எனது அமெரிக்க குடியுரிமை விட்டுத்தருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன் கோத்தபய ராஜபக்சே தெரிவித்தார். #GotabhayaRajapaksa #presidential polls #Lankapresidentialpolls
    பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். #Pakistan #PresidentialPolls
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் தற்போதைய அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் முடிவதையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி நடக்கிறது. இதில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் டாக்டர் ஆரிப் ஆல்வி போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இதற்காக பல நாட்களாக தொடர்ந்து அந்த கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. எனினும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதில் அந்த கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

    எனவே பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த அய்த்ஜாஜ் அசன் மற்றும் ஜமியாத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரகுமான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு எதிர்க்கட்சிகள் சார்பில் 2 பேர் போட்டியிடுவதால், ஆளுங்கட்சி வேட்பாளரான டாக்டர் ஆரிப் ஆல்வி எளிதில் வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    பாகிஸ்தான் அதிபரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #PresidentialPolls
    ×