search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Press Conference"

    • கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது
    • டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஜப்பானை தலைமையகமாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 7 வகை மாடல் கார்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை (சேஃப்டி டெஸ்ட் ) செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

    Collison டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகியவை உரிய முறையில் செய்யப்படாமல் அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.

     

    இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டோயோடா பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்து அதில் தோன்றிய அவர், இந்த முறைகேடுகளுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும் "I AM TRULY SORRY" என்றும் சில வினாடிகள் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார். 

    • 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.
    • 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை.

    பத்திரிகையாளர் அமைப்பான பிரஸ் கிளப் ஆப் இந்தியா பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

    அக்கடிதத்தில், "கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்துவது வழக்கம்.

    இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக உள்ள இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு நாளில் என்ன நடந்தது என்பதை பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும்.

    பத்திரிகையாளர் சந்திப்புகளில், பத்திரிகையாளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றைத் தீர்த்து வைப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.

    பத்திரிகையாளர்கள் நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களைப் பற்றி மக்களுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர்கள் மின்னணு ஊடகங்கள் மூலம் வாக்காளர்களிடம் நேரடியாக பேசலாம்.

    நாடு முழுவதும் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்த பிறகும், தேர்தல் ஆணையம் ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாதது குறித்து பத்திரிகையாளர் அமைப்புகளான நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். கடந்த தேர்தல்களில் இவ்வாறு நடந்ததில்லை. இந்த புதிய மாற்றங்கள் தேர்தல் நேர்மையாக நடக்கிறதா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சூழலில், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகும் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று கோருகிறோம். மேலும், வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நாளுக்குள் பதிவான வாக்குகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் இறுதியான வாக்குப்பதிவு சதவீதம் உள்ளிட்ட முழு வாக்குப்பதிவு தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று கோருகிறோம்.

    தேர்தல் முறையில் வாக்காளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய இத்தகைய வெளிப்படைத்தன்மை அவசியம். இந்தக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×