search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prevention Day Program"

    • நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமற்றும் கொடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் குமார் மற்றும் சுகுணா கலந்து கொண்டனர்.

     பல்லடம்:

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தையொட்டி பல்லடம் அருகே உள்ள அவினாசி பாளையம் காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவிநாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வி.கணேசன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு தினத்தைப் பற்றி விழிப்புணர்வும், அது தொடர்பான குழந்தைகள் உரிமைச் சட்டம் மற்றும் சமூக பொறுப்புகள் தொடர்பான புரிதல், குழந்தைகளுக்கு காவல் நிலையம் தொடர்பை பற்றி புரிதல் ஏற்படுத்து வகையிலும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்படும் விதமாகவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் நடந்தால் தாமதம் இன்றி காவல் நிலையத்தை தொடர்பு கொள்வது குறித்தும் விளக்கி கூறினார். புகார் தெரிவிக்க இலவச இணைப்பு எண் 1098 பற்றியும் பள்ளி குழந்தைகளிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிமற்றும் கொடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அதுபோல் பொங்கலூர் பொ.வெ.க.மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் அவிநாசி பாளையம் காவல்துறை அதிகாரிகள் சார்பாக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவிநாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், மாணவர்களிடையே பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது அவசியம் பற்றி 11மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சிவகுமார் செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியர் நரேஷ் குமார் மற்றும் சுகுணா கலந்து கொண்டனர்.

    ×