என் மலர்
நீங்கள் தேடியது "Princess Diana"
- இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது.
- இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை பெற்றது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.
இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது.
இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991-ம் ஆண்டு அரச குடும்ப வரைபடத்திற்காக அணிந்தார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு நடந்த போட்டோஷீட்டில் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.
- இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது.
- 1983-ம் ஆண்டு ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார்.
இங்கிலாந்து அரசர் சார்லசின் முதல் மனைவி டயானா 1997-ம் ஆண்டு கார் விபத்தில் தனது 36-ம் வயதில் பலியானார். இந்நிலையில் இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள் மற்றும் பொருட்கள் ஏலத்திற்கு வருவதும் அவை அதிக விலைக்கு ஏலம் போவதும் சமீபகாலமாக அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் இங்கிலாந்து ஆடம்பர பின்னலாடை நிறுவனம் தயாரித்து இளவரசி டயானா அணிந்த சிகப்பு நிற ஸ்வெட்டர் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. 1981-ம் ஆண்டு இளவரசர் சார்லசுடன் கோல்ப் போட்டி ஒன்றுக்கு டயானா இந்த ஸ்வெட்டரை அணிந்து சென்றிருந்தார். வரிசையாக வெள்ளை நிற ஆடுகள் படம் போட்ட இந்த ஸ்வெட்டரில் ஒன்று மட்டும் கருப்பு நிறத்தில் இருந்தது. இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.
1983-ம் ஆண்டு இந்த ஸ்வெட்டரை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் டயானா அணிந்து சென்றிருந்தார். தற்போது அந்த ஸ்வெட்டர் ஏலத்திற்கு வந்த போது 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும். இதற்கு முன்பு டயானா பயன்படுத்திய பொருட்களில் அவர் அணிந்திருந்த ஊதா நிற கவுன் ரூ.4.9 கோடிக்கு ஏலம் போனது. அதிக விலைக்கு ஏலம் போன பொருளாக இருந்தது.
- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு அட்டைகளும், உணர்வுபூர்வமான கடிதங்களும் ஏலத்திற்கு வருகிறது.
இளவரசி டயானா தனது முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் விடுமுறை வாழ்த்து அட்டைகள் வருகிற 27-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளன.
1981-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரையிலான 14 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அட்டைகளும் பல உணர்வுபூர்வமான கடிதங்களும் இந்த ஏலத்திற்கு வருகிறது.
இளவரசர் சார்லசை மணந்த பிறகு அவர்கள் எழுதிக் கொண்ட கடிதங்களும் இதில் அடங்கும். பெவர்லி ஹில்சில் உள்ள ஜூலியன்ஸ் ஏல நிறுவனத்தால் இந்த ஏலம் நடத்தப்பட உள்ளது.இதில் 1982-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி எழுதப்பட்ட ஒரு கடிதம் இளவரசர் சார்லசுடன் அவரது தேனிலவு பயணத்தின் மகிழ்ச்சியை குறிப்பிடுகிறது.
இதே போல ஒரு கடிதத்தில், தாய்மை உணர்வில் மகிழ்ச்சி அடைந்த டயானா, இளவரசர் வில்லியம் பிறந்த பிறகு தன்னை மிகவும் பெருமைப்படக்கூடிய மற்றும் அதிர்ஷ்டசாலியான தாய் என்று விவரிக்கிறார். மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கான தனது ஆர்வத்தையும் அதில் வெளிப்படுத்தி உள்ளார்.
1983-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து கையசைத்து விடைபெற்ற விதத்தை அவர் விவரிக்கும் 2 பக்க கடிதங்கள் டயானாவின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.
டயானாவின் கையால் எழுதப்பட்ட செய்திகள், அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் சிறந்த தருணங்கள் மற்றும் மைல்கற்களை இந்த கடிதங்கள் வெளிப்படுத்தும் என்பதால் இவை ஏலத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.