என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priya death"

    • ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
    • விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா, ராணி மேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார்.

    கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த மாதம் 20ம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு நடந்த தவறான ஆபரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

    தவறான சிகிச்சையால் கல்லூரி மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாணவி படித்த ராணி மேரி கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் இன்று காலை மெளன அஞ்சலி செலுத்தினர்.

    • விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன் இறந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவ குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் சிகிச்சையின் போது மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததும், மாணவிக்கு தவறான சிகிச்சை அளித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள்மீது துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாணவிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்த விவரங்கள் காவல்துறைக்கு கிடைக்காததால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகம், காவல்துறையிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ளுவார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

    ×