என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "priyanka"
- அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள்.
- ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள்.
பிரியங்கா காந்தி இன்று குஜராத் மாநிலம் தரம்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், அரசியலமைப்பை மாற்றுவோம் என கூறி வருகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களுடைய யுக்தி.
அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ? அதை முதலில் மறுப்பார்கள். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அதை அவர்கள் அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களைப் பலவீனப்படுத்தவும், நமது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் அரசியலப்பை மாற்ற நினைக்கிறார்கள்.
தேர்தலின்போது சூப்பர்மேன் போன்று மேடைகளில் அறிமுகம் ஆகிறார். ஆனால், அவர் பணவீக்கம் மேன் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியால் உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த முடியும் என பா.ஜனதா தலைவர்கள் அவர் வலிமையான நபராக முன்நிறுத்த விரும்புகிறார்கள். பின்னர் ஏன் அவரால் அதேபோன்ற வறுமையை ஒழிக்க முடியவில்லை.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
- ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.
ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.
இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.
இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
- டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். வழக்கின் முடிவை பொறுத்துதான் ராகுல்காந்தி தேர்தலை சந்திக்க முடியுமா? முடியாதா? என்பது தெரியவரும்.
வழக்கில் கவனம் செலுத்துவது மட்டுமில்லாமல் தேர்தலை சந்திக்க கட்சியையும் தயார்படுத்த வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக பிரியங்காவையும் முன்னிலை படுத்த வேண்டும் என்று பலரும் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
பிரியங்காவும் முழு நேர அரசியலுக்கு தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. டெல்லியில் நடந்த போராட்டங்களில் அவரும் பங்கேற்று ஆவேசமாக பேசினார்.
ராகுல்காந்தி வயநாடு எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி பறிக்கப்பட்ட பிறகு தொகுதியில் மக்களை சந்திக்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டது.
அதன்படி வயநாட்டில் இன்று மாலை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுபற்றி கேரள மாநில பொறுப்பாளரும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன் கூறியதாவது:-
ராகுல்காந்திக்கு ஆதரவாகவும், மோடியை கண்டித்தும் கேரளா முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தீப்பந்தங்கள் ஏந்தி எழுச்சியுடன் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஆர்.எஸ்.பி.ஜே.டி. (எஸ்) உள்ளிட்ட 7 கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள விமானத்தில் கோழிக்கோடு வரும் ராகுல்காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு வருகிறார். அவருடன் பிரியங்காவும் கலந்து கொள்கிறார்.
டெல்லியை விட்டு வெளியே வந்து பிரியங்கா பேசுவது இதுவே முதல் முறை. இது பிரியங்காவையும் தேசிய அரசியலில் முன்னிலை படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் கே.சுதாகரன், கே.சு.வேணுகோபால், ரமேஷ் சென்னிதலா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.விஸ்வநாதன் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்து வருகிறார்கள்.
மத்திய பிரதேச மாநிலத்தின் சில தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இறுதி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதையடுத்து அந்த மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடியும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் ஒரே நாளில் போட்டி போட்டு பிரசாரம் செய்தனர்.
நேற்று காலை மத்திய பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மோடி பொதுக்கூட்டங்களில் பேசினார். நேற்று மதியம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா டெல்லியில் இருந்து புறப்பட்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு வந்தார்.
இந்தூரில் அவர் ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து ராஜ்மோகல்லா என்ற இடத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழிநெடுக சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று பிரியங்காவை பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர். ஒரு இடத்தில் பிரியங்காவின் கார் வந்த போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று பா.ஜனதாவுக்கு ஆதரவாக கோஷத்தை எழுப்பினார்கள்.
அவர்கள், “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்று கோஷமிட்டனர். பிரியங்காவை பார்த்ததும் அவர்களது இந்த கோஷம் அதிகரித்தது. ஆனால் பிரியங்கா அவர்களை பார்த்து சிரித்தப்படி கையசைத்தபடி சென்றார்.
ஆனால் சிறிது தூரம் சென்றதும் பிரியங்காவின் கார் நின்றது. அவரது கார் பின்னோக்கி வந்தது. மோடி வாழ்க என்று கோஷமிட்டவர்கள் நின்ற பகுதியில் அவரது கார் நிறுத்தப்பட்டது.
காரில் இருந்து இறங்கிய பிரியங்கா சிரித்தபடி அந்த கூட்டத்தினரிடம் சென்றார். அவர்களிடம், “உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். வாழ்த்துக்கள்” என்று கூறி கை குலுக்கினார். பிறகு சிரித்தபடி அவர்களிடம் இருந்து விடைபெற்று காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
பிரியங்கா திடீரென தங்களிடம் வந்ததும் பா.ஜனதா ஆதரவாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். பிரியங்கா புறப்பட்டு சென்ற பிறகும் அவர்கள் இன்ப அதிர்ச்சியில் விடுபடவில்லை. பிரியங்காவின் எளிமையை பாராட்டிய படி கலைந்து சென்றனர்.
பிரியங்கா நேற்று மத்திய பிரதேசத்தில் இந்தூர், உஜ்ஜைனி, ரட்லம் நகரங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்தூர், உஜ்ஜைனி நகரங்களில் ரோடு ஷோ நடத்தினார்.
ரட்லம் நகரில் பொதுக்கூட்டத்தில் பேச சென்ற போது பாதுகாப்பு வளையத்தை மீறி பெண்கள் இருக்கும் பகுதிக்கு சென்றார். அங்கிருந்த பெண்களிடம் அவர் கேள்விகள் கேட்டு பேசினார்.
அப்போது பெண்கள் பலர் அவர் அருகில் நின்று செல்பி எடுத்தனர். அதற்கு பிரியங்கா சிரித்தப்படி போஸ் கொடுத்து விட்டு சென்றார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை (சோனியா காந்தியின் தொகுதி) சேர்ந்த அன்ஷூ என்ற பெண் பிரயாக்ராஜில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கட்டி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதுபற்றி பிரியங்கா காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஒரு குட்டி விமானத்தை ஏற்பாடு செய்தார். அந்த விமானத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் பட்டேல், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன், ராஜீவ் சுக்லா ஆகியோர் தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லி செல்ல இருந்தனர். அன்ஷூ அவரது பெற்றோர், ஹர்திக் பட்டேல், அசாருதீன் ஆகியோர் விமானத்தில் டெல்லி சென்று அந்த பெண்ணை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜீவ் சுக்லாவுக்கு விமானத்தில் இடம் இல்லாததால் பின்னர் அவர் ரெயில் மூலம் டெல்லி சென்றார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரதமர் நரேந்திர மோடியை துரியோதனனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் திஷ்னுபூரில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா இதுபற்றி கூறியதாவது:-
இவ்வாறு அமித்ஷா கூறினார். #Duryodhana #Arjuna #Priyanka #AmitShah
பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா ஆகியோர் தனித்தனியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ராகுலும், பிரியங்காவும் நேற்று உத்தரபிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி மற்றும் அவரது தாய் சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதைப்போல உன்னாவ் மற்றும் பாரபங்கி தொகுதிகளில் பிரியங்கா வாக்கு சேகரித்தார். இதற்காக அவர்கள் இருவரும் தனித்தனி ஹெலிகாப்டர்கள் மூலம் கான்பூர் விமான நிலையம் வந்து இறங்கினர்.
பின்னர் அங்கிருந்து தங்கள் தொகுதிகளுக்கு செல்லுமுன் இருவரும் சந்தித்து பேசினர். அப்போது தனது சகோதரர் மீதான பாசத்தை கட்டுப்படுத்த முடியாத பிரியங்கா, ராகுல் காந்தியை கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைபோட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது கேமராவுக்கு அருகில் வந்து பேசிய ராகுல் காந்தி, ‘ஒரு நல்ல சகோதரன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை உங்களுக்கு சொல்கிறேன். மிக மிக நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் எனக்கு சிறிய ஹெலிகாப்டர்தான் கிடைத்திருக்கிறது. ஆனால் மிகவும் குறுகிய பயணத்தை மேற்கொள்ளும் பிரியங்காவோ பெரிய ஹெலிகாப்டர் பெற்றிருக்கிறார்’ என்று நகைச்சுவையாக கூறினார்.
உடனே பிரியங்கா, ‘அது உண்மை இல்லை’ என சிரித்துக்கொண்டே சொன்னார். பின்னர் ராகுல் காந்தி, ‘ஆனால், நான் அவரை அன்பு செய்கிறேன்’ என்று குறிப்பிட்டார். இருவரின் சகோதர பாசத்தை பார்த்த விமான நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் நெகிழ்ந்தனர்.
பின்னர் இந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவேற்றி இருந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களின் பாராட்டையும் பெற்றது. #LokSabhaElection #RahulGandhi #Priyanka
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி துவங்கிய பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பின்னர் ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார். இதேப்போல் நாளை மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் ரோட்ஷோ நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PriyankaGandhi
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாட்டின் அனைத்து கட்சியினரும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியங்காவின் அகந்தை இந்த வீடியோவில் அவர் செய்யும் செயலில் தெளிவாக தெரிகிறது. தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை எடுத்து, லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு தன் கைகளால் போடுகிறார். இதன்மூலம் பிரியங்கா, மரியாதை செய்வதாக கூறி அவரை அவ மரியாதை செய்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் மதிப்பு என்ன என்பதை இந்த செயல் தெளிவாக காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #SmritiIrani #Priyanka
பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ளன. அதேப்போல், காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவை வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராகுல்- பிரியங்கா போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என மாயாவதி- அகிலேஷ் கூட்டணி தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இதற்கு மாயாவதி- அகிலேஷ் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். ‘எந்த கட்சியினரையும், கூட்டணியையும் காங்கிரஸ் கட்சியினர் எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது ஒரே நோக்கம், பாஜகவை வீழ்த்துவதே ஆகும். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அதற்கான முயற்சிகளிலும், பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’ என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். #Congress #Priyanka
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்