search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prize giving ceremony"

    • கோவில்பட்டி வேலாயுதபுரம் வேலாயுதம் நாடார் இல்லம் முன்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவர் தவமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு தோறும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளை பாராட்டி ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் கோவில்பட்டி வேலாயுதபு ரம் வேலாயுதம் நாடார் இல்லம் முன்பு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும், பொறியாளருமான தவமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து வேலாயுத புரம் முன்னாள் நாடார் சங்கத் தலைவர் ராஜரத்தினம், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற இணைச் செயலாளர் துர்க்கேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நாகராஜன், செந்தில்நாதன், சுப்புராஜ், முனிய செல்வம், கண்ணன், பேச்சிலட்சுமி, இலக்கியா, ஜோதிலட்சுமி, செல்வப்ரியா, நதிஷ் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிலம்பம் பயின்ற மாணவ- மாணவி களும் பாராட்ட ப்பட்டனர். மன்ற தலைவர் முருகன் நன்றி கூறினார்.

    • உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.
    • இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடிதேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் இந்துசமய பண்பாட்டு வகுப்புகளின் நிறைவு, மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    சேவாபாரதி அமைப்பின் சார்பில் உடன்குடி ஓன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கோடைகால இந்துசமய பண்பாட்டு வகுப்புகள் கடந்த 1 -ந் தேதி தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள், பயிற்சியளித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்னாள் மேலாளர் சாத்தாக்குட்டி தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மநாபன், உடன்குடி ஓன்றிய பா.ஜ.க. மகளிரணி தலைவி தமிழ்செல்வி, ஓன்றிய பா.ஜ.க. தலைவர் அழகேசன், ஓன்றிய துணைத்தலைவி சாந்தி, மகராசி, சுயம்பு, மாயாண்டி, சுபாஷ்ராஜா, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம் வரவேற்றார். இந்து ஓற்றுமை, பாரத நாட்டின் பழம் பெரும் கலாச்சாரம், இந்து சமயத்தின் அறிவியல் உண்மைகள் குறித்து திருச்சி தர்மபிரசார வீரராகவன் பேசினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் ரா.சிவமுருகன் ஆதித்தன் பரிசுகளை வழங்கி பல்வேறு இந்து சுவாமிவேடங்கள் அணிந்து வந்த சிறுவர்களை பாராட்டினார்.நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சுடலைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரப்பாண்டி உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

    • முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிகளில் பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் பங்கேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியின் 25-ம் ஆண்டு பரிசளிப்பு விழா பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் எஸ்.முகம்மது இக்பால் தலைமையில் நடந்தது.

    பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ்.அகம்மது பசீர் சேட் ஆலிம், துணைத் தலைவர்கள் இக்பால், அ.காதர் முகைதீன், முன்னாள் பேரூராட்சி உதவி சேர்மன் பாசில்அமீன், வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிவாசல் மழலையர் பள்ளி தாளாளர் எம்.செய்யது அபுதாஹீர் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும், பேருராட்சி சேர்மனுமான ஏ.ஷாஜஹான் பரிசு வழங்கி பாராட்டினார்.

    விழாவில் முன்னாள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்.எஸ்.லியாகத் அலி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன், முன்னாள் தலைமை ஆசிரியர் காதர் முகைதீன், ஆசிரியை பொன்னா மீனாள் பேகம், தொடக்கப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம் சீனி முகம்மது மற்றும் கல்வி குழுவினர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் பட்டிமன்றமும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.

    • சிவகங்கையில் கோலப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் "கொண்டாடுவோம் ஒன்றி ணைவோம்'' என்ற தலைப்பில் கோலப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், அமெரிக்கா,சிங்கப்பூர் நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களை போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர் ரோஜாக்கூட்டம், மல்லிகைத் தோட்டம், தாமரைத் தடாகம், செம்பருத்திப் பூக்கள், சூரியகாந்தி குடும்பம் என 5 குழுக்களாக வகைப்படுத்தினர். போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 80-க்கும் மேற்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக கொங்கரத்தி கிராமத்தை சேர்ந்த செல்வி நாராயணன் சிறந்த கோலநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கக்காசு பெற்றார். மற்ற வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்காசுகளும், எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டன.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களில் 3 பேரை அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை வல்லத்தரசு காளிதாசன், பாஸ்கரன், ஆறுமுகம், கிருஷ்ணன் சக்தி, வெள்ளைக்கண்ணு, ஜெயக்கண்ணன், போஸ், சத்திய நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழா பணிகளில் ராமநாதன் கவுதமன், ஆண்டாளியார், ஜெயக்குமார், பாஸ்கரன், அன்புச்செழியன், முருகானந்தம், சிவராஜன், கண்ணதாசன் ஈடுபட்டனர்.

    • பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தென்காசி:

    பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் 16-ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வெண்ணியுடையார் சாஸ்தா கோவில் திடலில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    விழாவிற்கு நெல்லை தெட்சணமாற நாடார் சங்க தலைவரும், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சங்க தலைவரும், வணிகர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவில் கே.என்.எஸ். குழுமம் நாராயண சிங்கம், சேவியர் டிம்பர்ஸ் உரிமையாளர் சேவியர் ராஜன், எஸ். பி.கே.டிரேடர்ஸ் கண்ணன் ஆகியோரும், குலசேகரபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மதி ெசல்வன், அருணோதயம், வெள்ளப்பாண்டியன், சந்தை மட்டன் ஹோட்டல் லிங்கதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி வரவேற்புரை ஆற்றினார்.

    விழாவிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற பொருளாளர் மாயாண்டி பாரதி, மன்ற செயலாளர் பரமசிவம், துணைத் தலைவர் ஈஸ்வர பாண்டியன், துணைச்செயலாளர் பால் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கபாடி குழு, சிவந்தி ஆதித்தனார் கால்பந்து கழகம், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் காமராஜ் நகர் பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


    • கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி ராமசாமி கோவில் திடலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • பரிசளிப்பு விழாவிற்கு சரவணன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி ராமசாமி கோவில் திடலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவில் சிறுவர், சிறுமிகளுக்கான பலூன் உடைத்தல், ஓட்டப்பந்தயம், கோலம் போடுதல், மற்றும் வாலிபர்களுக்கான விளையாட்டுகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சரவணன் மற்றும் கிருஷ்ணன் தலைமை தாங்கினர். கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலை வர் பொன் ஷீலா பரமசிவன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இதில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்

    ஊட்டி:

    நெல்லியாளம் நகராட்சியில் "நமது குப்பை நமது பொறுப்பு" தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பணியில் சிறப்பாக செயல்பட்டோருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

    நகராட்சி பொறியாளர் சிவகுமார், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்று சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் பேசினார்கள்.

    நமது குப்பை, நமது பொறுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வ அமைப்புகள் , கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி, உப்பட்டி, பந்தலூர், தேவாலா, நாடுகாணி நகர வியாபாரிகள், குடும்ப தலைவிகள், மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலகுமாரன் வரவேற்றார் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்க பட்டனர்

    • குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாம்பட்டி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு ஆன்லைன் வழியாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 65 ஊர்களை சேர்ந்த குழந்தைகள் போட்டியிட்டனர்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா ஊட்டி சேரிங் கிராஸில் உள்ள ஹார்ட்டிகள்சர் காம்ப்ளெக்ஸில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக தோட்டகலை உதவி இயக்குனர் சிபிலா மேரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டினார். நிகழ்ச்சியில் தாம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×