என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "producer"

    • இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
    • ல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    'எம்புரான்' படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எம்புரான்' கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    படம் வெளியானதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

    இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் சில காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிந்தார். பிருத்விராஜை தேசவிரோதி என ஆர்எஸ்எஸ் பத்திரிகை விமர்சித்தது.

    இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ கோகுலம் குழும நிறுவனங்களின் உரிமையாளர் கோகுலம் கோபாலனின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக எழுந்த புகார் தொடர்பாக சென்னையின் கோடம்பாக்கம் மற்றும் கொச்சியில் உள்ள கோகுலம் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    எம்புரான் பட சர்ச்சைக்கும் இந்த விசாரணைக்கும் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறையினர், இந்த விசாரணை முழுக்க அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான மட்டுமே என தெரிவித்தனர்.

    • கமல் கிஷோர் மிஸ்ரா ‘தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.
    • போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

    மும்பை:

    மும்பை அந்தேரி மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வாகன நிறுத்தத்தில் கடந்த 19-ந்தேதி இந்தி சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்தார். காரில் அவருடன் மாடல் அழகி ஒருவரும் இருந்துள்ளார். மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும், போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்றார். தனது கணவர் வேறு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து அவர் ஆத்திரமடைந்தார். மேலும் கணவரை தட்டிக்கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் தப்பிச்செல்ல முயன்றார். அப்போது மனைவி காரை தடுத்து நிறுத்த முயன்றார். இதில் திடீரென அவர் தவறி விழுந்தார். எனினும் தயாரிப்பாளர் ஈவு இரக்கமின்றி அவா் மீது காரை ஏற்றி விட்டு அங்கு இருந்து தப்பிச்சென்றார்.

    கார் ஏறியதில் யாஸ்மினின் கால், கை, தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. வாகன நிறுத்த காவலர்கள் தயாரிப்பாளர் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே யாஸ்மின் மீது காரை ஏற்றி செல்லும் காட்சிகள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்தநிலையில் தயாரிப்பாளரின் மனைவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர். கமல் கிஷோர் மிஸ்ரா இந்தியில் வெளியான 'தேஹாட்டி டிஸ்கோ' உள்ளிட்ட படங்களை தயாரித்து உள்ளார்.

    • சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர். தமிழில் பன்-டீ, நீ என் பூஜா லட்சுமி மற்றும் ஏராளமான மலையாள படங்களை தயாரித்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மாலை கர்நாடகா படம் சம்பந்தமான வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு வந்த கிருஷ்ணபிரசாந்தை ஒரு ஆம்னி வேனில் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்த கரிகாலன், சிவசக்தி, கார்த்திகேயன் ஆகிய கொண்ட கும்பல் கடத்தி கொண்டு வந்தனர்.

    அப்போது ஈரோடு கொண்டு வரும் வழியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வடக்கு பேட்டை என்ற இடத்தில் மடக்கி பிடித்து சினிமா தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்தை அந்த கும்பல் இடமிருந்து மீட்டனர்.

    இதனையடுத்து தயாரிப்பாளரை கடத்திய கரிகாலன், சிவசக்தி கார்த்திகேயனுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சினிமா தயாரிப்பாளரை கடத்தியது ஏன்? என்பது குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த தயா என்கிற கரிகாலன்(45) என்பவருடன் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத்துக்கு கடந்த வருடம் முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது கிருஷ்ண பிரசாந்தியிடம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சினிமா படப்பிடிப்புக்கு உகந்த இடமாக உள்ளது என்றும், நீங்கள் வந்து பாருங்கள் என்று கரிகாலன் கூறியுள்ளார்.

    இதனையடுத்து கிருஷ்ண பிரசாத் சத்தியமங்கலத்துக்கு வந்து சினிமா சம்பந்தமான லொகேஷன் பார்த்து உள்ளார். அப்போது கரிகாலன் அவரது நண்பர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவசக்தி ஆகியோர் தயாரிப்பாளர் கிருஷ்ணபிரசாந்தை ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர். அவர்கள் அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

    அப்போது கிருஷ்ண பிரசாந்த் உங்கள் 3 பேரையும் நான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று அவரிகளிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் ரூ.2.50 லட்சம் வரை தயாரிப்பாளருக்கு செலவு செய்துள்ளனர். ஆனால் கிருஷ்ணபிரசாந்த் கூறியவாறு அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. மாறாக காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோர் கிருஷ்ண பிரசாந்தை கடத்த திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி அவர்களுக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த அருண் என்பவரை கிருஷ்ண பிரசாந்திடம் நன்கு பழக வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கர்நாடகா பட வேலை விஷயமாக கிருஷ்ணபிரசாந்த் கிருஷ்ணகிரி வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கடத்த திட்டம் போட்ட கரிகாலன் கும்பல் அருணை அனுப்பி வைத்து பேச வைத்துள்ளனர்.

    நேற்று மாலை அருண், கிருஷ்ண பிரசாந்திடம் என்னிடம் நல்ல கதை உள்ளது உங்களிடம் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதனை யடுத்து இருவரும் கதை சம்பந்தமாக பேசி நடந்து கொண்டிருந்தனர். அப்போது வேனில் வந்த கரிகாலன், கார்த்திகேயன் சிவசக்தி ஆகியோர் கிருஷ்ணபிரசாத்தை கடத்தி கொண்டு சத்தியமங்கலம் வந்த போது நாங்கள் பிடித்துவிட்டோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இதனையடுத்து சத்திய மங்கலம் போலீசார் தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாத் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்த கரிகாலன், கார்த்திகேயன், சிவசக்தி ஆகியோரை சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்து வந்தனர்.

    அங்கு தயாரிப்பாளர் கிருஷ்ண பிரசாந்திடம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். பின்னர் கடத்தல் கும்பல் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணியளவில் கிருஷ்ணகிரி போலீசார் சத்தியமங்கலம் வந்தனர்.

    அவர்களிடம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி போலீசார் அந்த கடத்தல் கும்பலை விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முக்கிய இயக்குனர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபலமானாராம். தொடர்ந்து படங்களில் நடித்தவருக்கு சில நாட்களில் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். இதனால் நடிகை கவர்ச்சியில் இறங்கிவிட்டாராம். கவர்ச்சியில் மட்டும் இறங்கினால் போதாது அதற்கான வேலைகளிலும் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்த நடிகை தன் புகைப்படங்களை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்டு வந்தாராம்.

    தயாரிப்பாளர்களும் நடிகையின் தொல்லை தாங்காமல் அவரை பல மணிநேரம் காக்க வைத்துவிட்டு அனுப்பிவிடுவார்களாம். ஆனால், முயற்சியை கைவிடாத நடிகை விடாது கருப்பு போன்று தயாரிப்பாளர்களை பின் தொடர ஆரம்பித்தாராம். இதனால் பயந்து போன தயாரிப்பாளர்கள் நடிகையை கண்டதும் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.

    ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.

    நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.

    தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம்.

    அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை அணுகினார்களாம். ஆனால் நடிகை மறுத்ததால் கடுப்பான தயாரிப்பாளர் இனி நடிகையை எந்த படத்திலும் நடிக்க வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

    தமிழ் திரையுலகின் இளம் நடிகை பட வாய்ப்பு தேடி அலைந்தாராம். அப்போது தயாரிப்பாளர் ஒருவரை அணுகிய நடிகைக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தயாரிப்பாளர் ஒரு நாள் என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கண்டீசன் போட்டாராம். இதை கேட்ட நடிகை எதுனாலும் என் மேனேஜரிடம் கூறுங்கள் என்று தவிர்த்துவிட்டாராம். ஆனால், அந்த தயாரிப்பாளர் தொடர்ந்து நடிகையை தொல்லை செய்யவே நடிகை அந்த படத்தை வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.

    • பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜீவா நடிப்பில் வெளிவந்த ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    ஆர்யா, சந்தானம் , நசிரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் 2013 வெளிவந்த ராஜா ராணி படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

    பின்னர், நடிகர் விஜய் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு தெறி, 2017 ஆம் ஆண்டு மெர்சல் மற்றும் 2019 ஆம் ஆண்டு பிகில் என அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை இயக்கினார் அட்லீ.

    3 படங்களுமே வசூலை அள்ளியது. இதற்கு அடுத்து 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஐகானான நடிகர் ஷாருக்கான் நடிப்பில் "ஜவான்" படத்தை இயக்கி பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

    நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுக்கோண் நடித்த இப்படம் இந்தி சினிமாவில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைந்தது. 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது ஜவான்.

    இதற்கிடையே, அட்லீ தனது "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

    அந்த வகையில், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் மூலம் தமிழ்த்திரை துறையில் அறிமுகமானார்.

    இந்நிலையில், பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு இயக்குனர் அட்லீ-யின் "ஏ ஃபார் ஆப்பிள்" என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைதொடர்ந்து, அட்லீயின் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து தமிழ் படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜீவா நடிப்பில் வெளிவந்த 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இதற்கு முன் அட்லீ தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.
    • இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இத்திரைப்படம் சை ஃபை காமெடி படமாக அமைந்து மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரித்தது. அட்டக்கத்தி , பீட்சா, சூது கவ்வும் போன்ற பிரபல படங்களை திருக்குமரன் எண்டர்டெய்ன்மண்ட் தயாரித்துள்ளது.

    அந்த வரிசையில் இந்நிறுவனம் "பிட்சா 4 - ஹோம் அலோன்" திரைப்படத்தையும் "இன்று நேற்று நாளை" இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளது.இந்த படத்திற்கான துவக்க விழா நேற்று சென்னையில் உள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்த விழா தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

    டைம் டிராவல் கதையம்சம் கொண்ட "இன்று நேற்று நாளை" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கி இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார்.
    • படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

    வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படஹ்ட்தின் மூலம் தான் அறிமுகமாகிறார்கள்.கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில் படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு இயக்குனர் லிங்குசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடவுள்ளார். தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குற்றம் தவிர்.
    • தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப்பேசினார்

    ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குற்றம் தவிர். அட்டு படப் புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.ஆராத்யா, சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    படத்திற்கு பி.கே.எச் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா இன்று சென்னை பிரசாத் லேபில் உள்ள பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் நடைபெற்றது.

    தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசும்போது,

    "ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால் கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர்தான் வாங்குகிறார்.

    இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது.10 ட்யூன் வாங்குவோம் சில நேரம் 25 ட்டன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம்.

    கொத்தனார் வீடு கட்டுகிறார்.அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார் அவருக்குக் கூலி கொடுத்து விடுகிறோம். கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம் ,நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ அதைப்போல எங்கள் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு. நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம் .அவர் எங்களுக்கு வேலை செய்தார்.அது யாரா இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் .

    அவர் ஒரு பெரிய இசைஞானி அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது . பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம் "என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×