search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PROJECT WORKS INSPECTION"

    • புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் (திட்டம்) மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
    • பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம், மண்புழு உரம் தயார் செய்தல் மற்றும் இதர பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் (திட்டம்) மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இலுப்பூர் பேரூராட்சி நவம்பட்டி பூங்காவில் மியோவாக்கி காடுகள் முறையில் மரங்கள் நடப்பட்டுள்ளதையும், மூலதன மான்ய நிதித் திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சங்கரன் ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வீடு, வீடாக குப்பைகள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பணியாளர்களால் தரம் பிரித்து வாங்கப்படுவதையும், பேரூராட்சியின் சமுதாய கூடம் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு செய்தார்.

    பேருந்து நிலைய பொதுக் கழிப்பறை 15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், கோமுட்டி ஊரணி மேம்பாடு செய்யும் பணிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும் மற்றும் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம், மண்புழு உரம் தயார் செய்தல் மற்றும் இதர பணிகள் மேற்கொள்வதையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் காளியப்பன், உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், செயல் அலுவலர் ஆஷாராணி, உதவிப் பொறியாளர் உதயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா வைரவன், மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×