search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prostitute"

    ஆந்திர இளம்பெண்ணை விபசார கும்பலிடம் விற்பனை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி அடுத்த பாப்பிரெட்டி காசிபல்லியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.

    இவருக்கும மதனப்பல்லி ரெயில் நிலையம் அருகேயுள்ள நல்லகுட்டல பல்லியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    அவர்களுக்கு வம்சி என மகன் உள்ளார். மல்லாகார்ஜுனாவுக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இளம்பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    பின்னர் மதனபல்லியை சேர்ந்த நல்லபூரி எல்லம்மா என்பவரின் மகன் ரெட்டியப்பா என்பவருக்கு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்தனர்.

    அப்போது ரெட்டியப்பாவின் நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ரெட்டியப்பாவிடம் மும்பையில் உனது மனைவிக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளது. எங்களுடன் அனுப்பிவை என கேட்டுள்ளார்.ரெட்டியப்பா மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

    கடந்த 2017 ஜூலை 24-ந் தேதி மும்பையில் உள்ள ராணி என்பவரிடம் இளம்பெண்ணை விற்று உள்ளனர். கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் தங்கியிருந்து இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்தார்.

    அதில் தனது கணவருக்கு தெரிந்தே அவரது நண்பருடன் மும்பைக்கு அனுப்பி உள்ளார். எனவே எனது கணவர் ரெட்டியப்பா, அவரது நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர். #tamilnews
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசிய கருத்து சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது. #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார், ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுகிறார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



    சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் கேரள தலைவர் ரேகா ஷர்மா, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவாமல், எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்துக்களை கூறியிருப்பது கண்டு வெட்கப்படுகிறேன். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதப்படும்’ என தெரிவித்துள்ளார். #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    திண்டுக்கல் பழைய நீதிமன்ற கட்டிடம் பயன்பாடற்ற நிலையில் இருப்பதால் பல சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே அமைந்திருந்த பழைய நீதிமன்ற கட்டிடம் பல வரலாற்று நினைவுகளை தாங்கியதாகும். நீதிமன்றத்தில் உள்ள பழங்கால கட்டிடங்கள் கருங்கற்களால் கட்டப்பட்டு இன்றளவும் சேதமடையாமல் கம்பீரமாக உள்ளது.

    ஆனால் அதன் பிறகு கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டன. தற்போது புதிய கோர்ட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது.

    இதனால் பழைய நீதிமன்ற கட்டிடம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை திண்டுக்கல் மாவட்ட மக்கள் பெரிதும் பயன்படுத்தும் வகையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகங்கள் என்று பயன்தரும் கட்டிடமாக மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்தவித அறிவிப்பும் வராததால் சமூக விரோத செயல்களுக்கு புகலிடமாக இரவு நேரங்களில் மதுபானம் அருந்துபவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இதனை பயன்படுத்துகின்றனர். அவர்கள் விட்டு செல்லும் மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஆணுறை ஆகியவை மலைபோல் குவிந்து உள்ளன.

    நீதிபதிகள் தங்கி இருந்த அறைகளில் பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த கட்டிடத்துக்கு காவலாளி கிடையாது. 4 புறமும் வாசல் உண்டு. எந்த வழியாக வேண்டுமானாலும் ஆட்களை அழைத்து உள்ளே வந்து விடலாம்

    இதனால் அந்தி மயங்கியவுடன் குடிமகன்களும் இங்கு வந்து மயங்கி விடுகின்றனர். பாலியல் தொழிலும் தற்போது இங்கு அரங்கேறி வருவதால் இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×