search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public petitions"

    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்கள் பெறப்பட்டது.
    • விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்களைபெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்துஅதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)அம்பாயிரநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், திட்டஇயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.
    • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

    குண்டடம் :

    திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மகளிா் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனைப் பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீா் வசதி, கோயில் புனரமைப்பு பணிகள், சமுதாயக் கூடம், பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூா், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையிலும் கொண்டு வர முடிகிறது. வெள்ளக்கோவில், மூலனூா், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதற்கும், மின்மோட்டாா் மற்றும் பழுதான குழாய்களை மாற்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறோம். பெறப்படும் மனுக்களின் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் சிவசெந்தில்குமார், குண்டடம்-ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, யூனியன் கவுன்சிலர் புங்கந்துறை சண்முகபிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்பணித் துறை யினருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டது.
    • ஒவ்வொரு அலுவலர் நிலையிரும் நிலுவை இனங்களை ஆய்வு செய்து உடன் அவற்றை முடிவு செய்ய வருவாய்த்துறை அலுவலர்ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் கிரு தலைமையில் வருவாய்த்துறை, பொதுப் பணி ( நீர்வள ஆதாரம்), சிற்றாறு வடிநில கோட்டம், மேல வைப்பாறு வடிநில கோட்டம், மாவட்ட தீய ணைப்பு துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுன்சோங்கம் ஜடக் சிரு பேசியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சான்றிதழ்கள், ஓய்வூதிய மனுக்கள், பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள் குறித்தும் பொதுப்பணித் துறை யினருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, ஒவ்வொரு அலுவலர் நிலையிரும் நிலுவை இனங்களை ஆய்வு செய்து உடன் அவற்றை முடிவு செய்ய வருவாய்த்துறை அலுவலர்ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ( பொது) முத்து மாதவன், வருவாய் கோட்டாட்சி யர்கள், கெங்காதேவி( தென்காசி), சுப்புலெட்சுமி ( சங்கரன்கோ வில்), கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் கிரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    • நெல்லை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
    • பொதுமக்களுக்கு வழங்கும் மனுக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்க கோரிக்கை

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாளில் மாநகர பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் அடிப்படை வசதிகள் உள்பட தங்களது புகார்களை மனுவாக மேயரிடம் கொடுத்து வருகின்றனர்.

    இது தவிர சமூக ஆர்வலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். வாரம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும், நாளில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் காலை 10 மணிக்கே வந்து விடுகின்றனர்.

    முகாம் தொடங்குவதற்கு 12 மணி ஆகிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் இரண்டு மணி நேரம் பொதுமக்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்படுகிறது.

    எனவே வாரம்தோறும் முறையான நேரத்தில் அதிகாரிகள் வந்து மனுவை பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவ்வாறு மேேயரால் வர முடியவில்லை என்றாலும் அதற்கான பொறுப்பு அதிகாரியை நியமித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விட வழிவகை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கு முன்பு மனுக்களை பெற்றுக் கொண்டதும் மாநகராட்சி சார்பில் அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். ஆனால் தற்போது மனு அளித்ததற்கான எந்தவித ஆதாரமும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதில்லை.

    எனவே ஒப்புகை சீட்டு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு–ள்ளது.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    • கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர் களுக்காக பசுமை முதன்மையாளர் விருது என்ற விருதை நிறுவி வழங்கி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

    இதில் நீலகிரி மாவட்ட த்துக்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழி ற்சாலைகள் ஆகி யோரிடம் இருந்து பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் கிளீன் குன்னூர் மற்றும் பகல்கோடு மந்து சூழல் மேம்பாடு குழு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு பசுமை முதன்மையாளர் 2021 விருதிற்கு உரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிளீன் குன்னூர் நிறுவனத்துக்கான பசுமை சாதனையாளர் விருது சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற மற்றொரு நிறுவனமான பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுக்கான விருதினை அக்குழுவின் தலைவர் மணிகண்டனுக்கு நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×