என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்
- தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுப்பணித் துறை யினருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டது.
- ஒவ்வொரு அலுவலர் நிலையிரும் நிலுவை இனங்களை ஆய்வு செய்து உடன் அவற்றை முடிவு செய்ய வருவாய்த்துறை அலுவலர்ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஆகாஷ் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் கிரு தலைமையில் வருவாய்த்துறை, பொதுப் பணி ( நீர்வள ஆதாரம்), சிற்றாறு வடிநில கோட்டம், மேல வைப்பாறு வடிநில கோட்டம், மாவட்ட தீய ணைப்பு துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுன்சோங்கம் ஜடக் சிரு பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் பொது மக்களுக்கு இ-சேவை மையம் மூலம் வழங்கப்படும் அனைத்து விதமான சான்றிதழ்கள், ஓய்வூதிய மனுக்கள், பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கைகள் குறித்தும் பொதுப்பணித் துறை யினருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து தென்காசி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, ஒவ்வொரு அலுவலர் நிலையிரும் நிலுவை இனங்களை ஆய்வு செய்து உடன் அவற்றை முடிவு செய்ய வருவாய்த்துறை அலுவலர்ளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ( பொது) முத்து மாதவன், வருவாய் கோட்டாட்சி யர்கள், கெங்காதேவி( தென்காசி), சுப்புலெட்சுமி ( சங்கரன்கோ வில்), கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் கிரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்