search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pudhupalayam"

    • 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை புதுப்பாளையம் கிளைக்கால்வாய் வாயிலாக 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கால்வாயில் முதல் சுற்றுக்கு அக்டோபர் 28ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் சுற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சுற்றுக்கு, பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டர் வழியாக, புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- முதல் சுற்று தண்ணீர் திறப்பின் போது, தொடர் மழை பெய்தது. தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.மேலும் போதிய இடைவெளி இல்லாமல், தண்ணீர் திறக்கப்படுவதால், மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்கும் போது போதுமான தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என்றனர்.

    • 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு கூறியதாவது:-

    அவிநாசி வேளாண்மை துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு புதுப்பாளையம், செம்பியநல்லூர், சேவூர், பாப்பாங்குளம், ஆலத்தூர், பழங்கரை, நம்பியாம்பாளையம் என 7 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 15 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கி அமைக்கப்படும் தொகுப்புக்கு, வேளாண்மை துறை விவசாயிகள் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்படுகிறது.அதன்படி பாப்பாங்குளம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுப்பாளையம் கிராமத்திலும் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×