search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "puduchery LG"

    • ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் செயல்படுத்தி இருக்கலாம்.
    • அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எப்படி புற்று நோய் உடலுக்கு கெடுதலோ அதுபோல தீவிரவாதம் என்பது தேசத்தின் புற்று நோய். அதை அப்படியே  விட்டு விட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடக் கூடாது. அதனால்தான் என்.ஐ.ஏ.அலுவலகம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

    மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் தீவிரவாதத்தையும், தீவிரவாத முயற்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே இதில் அரசியல் புகுத்தாமல், எந்த சமூகத்தை சார்ந்தவர், எந்த இயக்கத்தை சார்ந்தவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்று இல்லாமல் தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பாதுகாப்பை தர முடியும். ஒட்டுமொத்தமாக தீவிரவாதம் இல்லாத பாரத தேசம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வெளிநாடுகளில் எல்லாம் இரண்டு முதல் 4 மொழிகள் அரசாட்சி மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு தமிழிசை கூறியதாவது:

    சிதம்பரம் இன்னைக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா...நேற்றுதான் வந்தாரா...முந்தாநாள் வந்தாரா...பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கத்தில் அங்கமாக அவர் இருந்து வந்துள்ளார். இதை ஏன் அன்றைக்கு அவர் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் பல நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கலாம். அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பதுதான் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×