என் மலர்
நீங்கள் தேடியது "Pudukkottai Fire Accident"
- மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகன் முருகேசன் (வயது 25), மரம் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று இரவு மழையூர் கடைவீதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
மழையூர் டாஸ்மாக் கடை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை வழிமறித்த மர்ம ஆசாமிகள் சிலர் முருகேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், தலை, தோள்பட்டை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த முருகேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே முருகேசன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மழையூரில் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் முருகேசன் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகேசன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர்.
- மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பேராவூரணி சாலையில் பாத்திர கடை, நகை மற்றும் பல கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பலதரப்பட்ட கடைகள் இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள நகைக் கடையில் நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை கடையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. சற்று நேரத்தில் தீ மளமளவென எரிய தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக இந்த தீ அருகில் இருந்த பாத்திரக் கடை மற்றும் அக்கடையில் குடோனில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு ஆகியவற்றின் மீது பரவி எரிய தொடங்கியது.
இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் மணல் மற்றும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் தீ பரவாமல் இருக்க அருகில் இருந்த கட்டிடங்களிலும் தண்ணீரை பீச்சியடித்தனர்.
இந்த விபத்தில் நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்குமா? அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.