என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pulmonary treatment"

    • அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.
    • காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

    பனிக்காலங்களில் அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பனிப்புகையும், மனித செயல்கள் மூலம் உருவாகும் காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மூச்சுத் திணறல், பெருமூச்சுவிடுதல், சுவாசிக்கும் போது விசிலடிப்பது போன்ற சப்தம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்?

     வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கலந்த புகை, தீங்கான விஷம் கலந்த தொழிற்சாலை புகைகள் மற்றும் சில ரசாயனக் கரைசல்களின் புகைகள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிப்போம். இந்த நச்சுப் புகைகள் தான் சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

    மற்ற காலங்களை விட பனிக்காலங்களில் நமது உடல் வெப்ப அளவை விட மிகக்குறைவாக. குளிர்ந்த வெளிக்காற்று இருக்கும். சுவாசப் பிரச்சினை ஏற்பட இது ஒரு காரணம் ஆகும். மருத்துவரையோ அல்லது நுரையீரல் சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.

    மருந்தகத்தில் மருந்து- மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் மூச்சுத் திணறல் அதிகமாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது ஒரே நாளில் கிடைக்காது. சில காலங்களுக்கு சில விஷயங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

     தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

    1) தீங்கு விளைவிக்கக் கூடிய துகள்கள் கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க வேண்டும்,

    2) பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகள், இனிப்பு உணவுகள், இறைச்சி உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    3) நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்ந்த உணவுகள், குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

    4) மன நிம்மதியின்மை, மன அழுத்தம் முதலியவைகளும் மூச்சுத் திணறலை அதிகமாக்கும்.

    5) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள் குளிரையும், குளிர்ப் பிரதேசங்களையும் தவிர்க்க வேண்டும்.

    6) தினமும் உங்களால் முடிந்த ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்து உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    7) ஊதுவத்தி, கொசு வத்தி, கற்பூரம் போன்றவற்றின் புகை அருகில் இருக்க வேண்டாம்.

    8) சிகரெட் புகைப்பவரின் அருகில் நிற்கக்கூட செய்யாதீர்கள். நச்சுக்காற்றின் அபாயங்களைத் தவிருங்கள். நலமுடன் வாழுங்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
    • திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம்.

    நுரையீரலின் வலிமை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இப்போதுள்ள உலக சூழலில் புகைப் பழக்கத்தைவிட சுற்றுச்சூழல் மாசின் காரணமாக தான் நிறைய நுரையீரல் பிரச்சனைகள் மக்களுக்கு ஏற்படுகிறது.

    நமது நாட்டில் டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை போன்ற பெரும் நகரங்களில் இந்த மாசு அதிகரித்து வருகிறது. இதனால் நுரையீரல் சார்ந்த நோய்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காண சில உணவுகளை நீங்கள் டயட்டில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது.


    * பூண்டில் நிறைய நச்சுக்களை போக்கும் மூலப்பொருட்கள் இருக்கின்றன. மேலும், இதிலிருக்கும் அல்லிசின் (allicin) நச்சுக்களை அழிக்கவும், எதிர்த்து போராடவும் உதவுகிறது. பூண்டு ஆஸ்துமா பிரச்சனை குறையவும், நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கவும் வலுவளிக்கிறது.

    * இஞ்சியிலும் நச்சுக்கொல்லி மூலப்பொருட்கள் இருக்கின்றன. அன்றாட உணவில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக் கொள்வது நல்லது. சுவாசக் குழாயில் தேங்கும் நச்சுக்களை அழிக்க இஞ்சி உதவுகிறது.

    * பூண்டு, இஞ்சியை போலவே மஞ்சளிலும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் மூலப்பொருட்களும், நச்சுக்களை அழிக்கும் தன்மையும் நிறைய இருக்கிறது.

    * ஆப்பிளில் நிறைய வகை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் இருக்கின்றன. இவை சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் பயனளிக்கிறது.

    * பிளாக் பெர்ரி, புளூ பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி உணவுகளில் ஆண்டி-ஆக்ஸிசிடன்ட்ஸ் இருக்கின்றன. இவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் சார்ந்த தொற்று அல்லது நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.

    * திராட்சைப்பழத்தில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம். ஒருவேளை உங்கள் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகும் காரணிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீண்டு வர, சுத்தம் செய்ய திராட்சைப்பழம் உதவுகிறது.


    * மாதுளையில் நிறைய நல்ல மூலப்பொருட்கள் இருக்கின்றன. இது நுரையீரலில் ஏற்படும் பிரச்சனைகளின் வளர்ச்சியை தடுக்கும் குணமுள்ளது.

    * இந்த உணவுகளில் அதிகளவில் மெக்னீசியம் உள்ளது. ஆஸ்துமா பிரச்சனை இருக்கும் நபர்கள் இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது சிறப்பு. மேலும், இது நுரையீரலின் திறனை அதிகரிக்க செய்து, செயல்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

    * பிஸ்தாவை அப்படியே சாப்பிடுவது நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோயை தடுக்கவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் கூட பிஸ்தா பயனளிக்கிறது.

    * வரமிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் தொண்டை புண், இருமல் சரியாகவும், சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கவும் உதவுகிறது. மேலும் மூச்சுக்குழாய் நெரிசலுக்கும் கூட இது நல்ல தீர்வளிக்கிறது.

    * வைட்டமின் பி6, சி, ஃபோலிக் அமிலம் சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் வெங்காயம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் தன்மை கொண்டது வெங்காயம். இது நுரையீரல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பண்புடைய உணவாகும்.

    * சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெறும் நீரை பருகுவது நல்லது. இது, நுரையீரல் மட்டுமின்றி, உடலில் இருக்கும் நச்சுக்களை போக்கும் திறன் கொண்டது ஆகும்'

    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.

    நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.

    நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-


    இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),

    தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.


    ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.

    நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

    ×