என் மலர்
நீங்கள் தேடியது "Puneet Singh Rajput"
- சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார்.
- நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை.
போஜ்பூரி நடிகையான பிரியன்சு சிங், சக நடிகர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். தன்னுடன் இணைந்து நடித்த புனித் சிங் ராஜ்புத் மீது அவர் இந்த புகாரை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பிரியன்சு சிங் கூறுகையில், "சமூக வலைதளங்கள் மூலம் எனக்கு புனித் சிங் ராஜ்புத் அறிமுகம் ஆனார். என் மூலமாகவே அவர் படங்களிலும் நடித்தார். என்னிடம் அன்பாக பழகிய அவர், என்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்தார். அதை நம்பி நானும் அவருடன் நெருக்கமாக பழகினேன்.
ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோதையில் வந்த அவர், என்னிடம் தகாத முறையில் அத்துமீறி நடந்துகொண்டார். பின்னர் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு என்னை சமாதானப்படுத்தினார். திருமணம் செய்துகொள்வதாக அவர் தொடர்ந்து உறுதி அளித்ததால் நான் இதை பெரிதுபடுத்தவில்லை.
இதற்கிடையில் இதேபோல மீண்டும் ஒருமுறை என்னிடம் அத்துமீறினார். முடியை பிடித்து இழுத்து சொல்லமுடியாத அளவில் என்னை பலாத்காரம் செய்தார். நான் இனியும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் விருப்பமில்லை. எனக்கு நீதி வேண்டும். புனித் சிங் ராஜ்புத் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.
நடிகையின் பாலியல் பலாத்கார புகார் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.